காவியுடை தரித்தவர்களின் ஒழுக்க மீறல்களை விசாரிக்க புதிய சட்டம்!

ஒழுக்க மீறல் செயல்களுடன் தொடர்புடைய காவியுடைதரித்தவர்களை  சாசனத்தில் இருந்து அகற்றுவதற்கு, அந்தந்த பெளத்த மதப் பிரிவுகளின் சங்க சபைக்கோ மகாநாயக்கர்களுக்கோ அதிகாரம் இல்லை. இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்படுவதாக பெளத்த மத அலுவல்கள் பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார். 

காவியுடை தரித்த ஒரு சிலரது ஒழுக்க மீறல் செயல்கள் காரணமாக ஒட்டுமொத்த பிக்கு சமூகத்திற்கும் இழிவு ஏற்பட்டிருப்பதைத் தான் ஏற்பதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் வைத்து கூறியுள்ளார். வாய் மூல விடைக்காக புத்திக பதிரண எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  (மு) -Dailyceylon.com

No comments:

Post a Comment