தம்புள்ளை மஸ்ஜித் பிரச்சினை உட்பட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட பேச்சுவார்த்தை
ஒன்றை நடத்தவுள்ளதாக அறிய முடிகிறது .
முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஆளும் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வெசாக் தினத்தின் பின்னர் இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது.என அறிவிக்கபடுகிறது .
இதற்காக நேரத்தை ஒதுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில், ஜனாதிபதியை அமைச்சர் ரிசாட் பதியுதின் சந்தித்து தம்புள்ளை மஸ்ஜித் அடங்கலாக முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து விளக்கியுள்ளார்.
நான் ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவந்தேன். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்ந்தும் பிரச்சினைகளையும் முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளன. இந்த விடயத்துக்கு நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறித்த பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றக்கூடாது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டேன்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேரத்தை ஒதுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். என அமைச்சர் தெரிவித்துள்ளார் .

No comments:
Post a Comment