தேடி வரும் மோடி யின் ஆதரவு: அளுத்கமை முஸ்லிம்கள் தொடர்பில் மோடி தீவிர கவனம் செலுத்த உள்ளார் !!

02TH_CITY_MODI_620590f
இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதல்கள் தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி தீவிர கவனம் செலுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நரேந்திரமோடி கடந்த தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பதிவு செய்திருந்தாலும், அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற நிலையிலேயே பார்க்கப்படுகிறார்.
இந்த தோற்றத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கும் நிலையில், முன்னர் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை, தமது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்திருந்தார். இதன் வழிவந்த அழைப்பே இலங்கை ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் தற்போது இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் நாட்டிலும் முஸ்லிம்கள் எதிர்பார்ப்பட்டங்களை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் இந்திய பிரதமர், இந்த விடயத்தில் அதிக முனைப்பை காட்டுவதன் மூலம், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் நல்லெண்ணத்தை பெறலாம் என்று கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://puttalamtoday.com/

No comments:

Post a Comment