முஸ்லிம் சமூகத்தை அரக்கத்தனமான சமூகமான சித்தரிக்காது நாட்டில் அல்கைதா அமைப்பின் செயற்பாடுகள் இருந்தால் அது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடுகளை செய்யுமாறு தேசிய சூரா பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
சூரா அமைப்பு இலங்கையின் தேசிய அளவிலான முஸ்லிம் அமைப்பாகும். அந்த அமைப்பின் தலைவர் தாரிக் மாஹமூட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஜிகாத் குழுக்கள் இயங்குவதாகவும் அந்த குழுக்கள் அளுத்கம மோதல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறானது.
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் கடந்த ஜூன் 15ம் திகதி முஸ்லிம் சமூகம் மீது தொடுக்கப்பட்ட வன்முறைகளை விட இந்த கூற்றுக்கள் நாட்டின் முஸ்லிம் சமூகத்தை மிக மோசமாக பாதித்துள்ளது.
ஜூன் 15ம் 16ம் திகதிகளில் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பை கட்டவிழ்த்து விட்டு, தண்டனையோ, மன்னிப்போ கோராத வன்முறை குழுக்களே இந்த குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன எனவும் தாரிக் மாஹமூட் தனது அறிக்கையில் கூறியுள்ளார். http://puttalamtoday.com/

No comments:
Post a Comment