பொலிஸாருக்கு பௌத்த ஆலோசனை டிப்ளோமா பயிற்சி நெறி !

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக பௌத்த ஆலோசனை டிப்ளோமா பயிற்சி நெறியொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. என ஊடக தவல்கள் குறிப்பிடுகிறது .

மேலும் அந்த தகல்களில் ,பௌத்த பாலி பல்கலைக்கழகத்தின் மஹோபாத்திய தெமாலியே இந்தராசார தேரர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோரின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த விசேட பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட உள்ளது.


பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பௌத்த மத கொள்கைகளை கற்பிக்கும் நோக்கில் இந்த விசேட டிப்ளோமா பயிற்சி நெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலாம் குழுவில் 54 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

எனினும், எப்போது இந்தப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது என்பது பற்றிய உத்தியோகபூர்வ திகதிகள் வெளியிடப்பவில்லை.

பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பௌத்த பாலி பல்கலைக்கழகத்தின் பிரதான காரியாலயத்தில், வார இறுதிகளில் இந்த பயிற்சி நெறி நடத்தப்பட உள்ளது.

30ஆண்டு கால போரின் பின்னர் பொலிஸார் மக்களுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளவும், செய்யப்படும் புகார்களை பௌத்த ஆலோசனைக்கு அமைய தீர்க்கவும் இந்த பயிற்சி நெறி வழியமைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குடும்ப பிணக்கு, மோதல் சம்பவங்கள் போன்றன தொடர்பிலான புகார்களுக்கு நீதிமன்றம் செல்லாமலேயே தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 பயிற்சி நெறியில் பங்கேற்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளும் கற்பிக்கப்பட உள்ளத.


No comments:

Post a Comment