குர்ஆனை நிந்திப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. அப்படி நிந்தித்தவர்கள் வரலாற்றிலே நல்ல முறையில் வாழ்ந்ததாகவும் கிடையாது. குர்ஆனை நிந்திப்பவர்களின் முடிவு மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பதை சேனாக்களுக்கு கூறுகின்றேன் என ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் குறித்த சட்ட மூலத்தில் கசினோ விடயம் இல்லை என தெட்டத்தெளிவாக கூறியுள்ளார்கள். இதனை விட வேறு என்ன உத்தரவாதம் வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் தேசிய பொது விதிகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் -

No comments:
Post a Comment