பேருவளை தர்கா நகரில் இராணுவத்தினருக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது டெய்லி சிலோன் செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை பேருவளை அளுத்கம நகரிலுள்ள நகரில் அமைந்துள்ள முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவிவந்தது. இந்நிலையில் முஸ்லிம்களின் வெள்ளிகிழமை ஜும்ஆ கடமையின் பின்னர் அங்கு கடமையிலிருந்த இராணுவத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment