இன வெறியை வளர்க்க மிம்பர் மேடைகளை பயன்படுத்த வேண்டாம்- ரிஸ்வி முப்தி

இன வெறியை வளர்ப்பதற்கும், பிற மதங்களை நிந்திப்பதற்கும் மிம்பர் மேடைகளை பயன்படுத்த வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று கொள்ளுபிடிய ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற குத்பா பிரசங்கத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

மிம்பர் மேடைகள் அமைதி, சமாதானத்தை வலியுறுத்தும் இடமாகவே அமைய வேண்டும். மாற்றமாக இனத் துவேஷத்தையும், அநீதிகளையும் தூண்டும் தளமாக அமையக் கூடாது எனவும் தெரிவித்தார்.

அநீதி இழைத்தோர் சிறுபான்மையினரோ, பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த யாராக இருந்தாலும் நிச்சயம் இறைவனால் தண்டிக்கப்படுவர் எனவும் அதன் போது அவர் சுட்டிக் காட்டினார்.  (மு) http://www.dailyceylon.com/index.php/2013-04-22-19-01-05/mainnews/item/6275-இன-வெறியை-வளர்க்க-மிம்பர்-மேடைகளை-பயன்படுத்த-வேண்டாம்-ரிஸ்வி-முப்தி

No comments:

Post a Comment