பள்ளிவாசல்கள், ஆலயங்கள் எங்கே உடைக்கப்பட்டுள்ளன? -ஜனாதிபதி-

பள்ளிவாசல்கள், கத்தோலிக்க ஆலயங் கள் உடைக்கப்படுவதாக சில எதிர்க்கட்சிகளும் மற்றும் சமய இன ரீதியான கட்சி­களும் பாரியளவில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. எங்கே எவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன?
அரசாங்கத்தை எதிர்ப்பதற்காகவும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் இவ்வா­றான செயற்பாடுகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வேண்டுகோள் விடுத்தார்.
கம்பஹா மாவட்டத்தில் ஹேரகல பத்மாவதி பிரிவெனாவின் சமய கலை கலாசார கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதி­தியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெருந்திரளான பௌத்த குருமார் கலந்து கொண்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் சமயத்தின் பெய­ராலும் இனத்தின் பெயராலும் இயங்கி வரும் சில அரசியல் கட்சிகள் எமது நாட்டைப் பற்றி சர்வதேசத்துக்கு தவறான கருத்துக்­களை பிரசாரம் செய்து வருகின்றன.
பள்ளிவாசல்களை உடைக்கிறார்கள். கத்தோலிக்க தேவாலயங்களை உடைக்கிறார்கள் என்கிறார்கள் எங்கே உடைக்கப்பட்டிருக்­கின்றது? அவ்வாறு எங்கும் உடைக்கப்படவில்லை. எல்லாம் பொய் பிரசாரம் நாட்டில் எங்காவது பள்ளிவாசல்களோ கத்தோலிக்க ஆலயங்களோ உடைக்கப்பட்டிருந்தால் நிரூபிக்கப்படும்.
பள்ளிவாசலுக்கென சொந்தமாக இல்லாத காணியில் பள்ளிவாசல் நிர்மாணிக்க முடியாது என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. வீடு­களில் பள்ளிவாசல்கள் இயங்க முடியாது என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் பள்ளிவாசல்களை உடைத்­தார்கள். மத ஸ்தலங்களை உடைத்தார்கள் என்று உலகத்துக்கு ஏன் பொய் சொல்லுகிறார்கள்? அது ஏன் என நினைத்துப்பாருங்கள் அனைத்து மதங்களையும் மதிப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
பௌத்த தர்மத்தை நாம் பாதுகாப்பதற்கு நாம் அரசியலமைப்புக்கிணங்க கடமைப்பட்டுள்ளதுடன் ஏனைய மதங்களையும் பாதுகாப்­பதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது. பௌத்த குருமாரும் நாட்டு மக்களும் நாட்டுக்கு எதிரான சோதனைகள் வந்த போதெல்லாம் நாட்டைப் பாதுகாத்துள்ளார்கள். நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை எதிர்த்து பௌத்த குருமார் உதவியிருக்கின்றார்கள்.
இன்று தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி கண்டுள்ளது. பேஸ்புக் மூலம் இடம்பெறும் சில சம்பவங்கள் வருத்தத்துக்குரியன. அதனைத் தடை செய்ய வேண்டுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் பேஸ்புக்கை தடை செய்யும் படி உத்தரவு பிறப்பிக்க முடி­யாது.
பிள்ளைகளுக்கு நன்மை எது? தீமை எது? என்பதை எடுத்து விளக்க வேண்டும் பெற்றோர் இது தொடர்பில் மிகவும் அவதானத்­துடன் இருக்க வேண்டும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் தவறு தகவல் தொழில்நுட்பத்தில் இல்லை. அவற்றை நேரான வழியில் பயன்படுத்தாமையே தவறாகும்.
இன்று பாடசாலைகளில் மாத்திரமல்ல பிரிவெனாக்களுக்குள்ளும் கம்பியூட்டர் வந்து விட்டது. படிக்கும் எமது பௌத்த குருமார் கணனி அறிவினைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும் என்றார். News from - Vidivelli



No comments:

Post a Comment