கர்ப்பமான நிலையில் இளம் பெண் பௌத்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் சர்ச்சை

திருகோணமலை பொது வைத்தியசாலையில் வயிற்று வலி எனக் கூறி அனுமதிக்கப் பட்ட பௌத்த துறவி கர்ப்பிணி என சிறுநீரக பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
கோமரங்கடவெல – பக்மீகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பௌத்த பெண் துறவிக்கே இவ்வனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரிய வருவதாவது,
இன்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் வயிற்று வலி எனக் கூறி அனுமதிக்கப்பட்ட போது அத்துறவி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அதனையடுத்து இரத்தம் – சிறுநீர் பரிசோதனை செய்த போது அவருடைய வயிற்றில் பிள்ளை இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது பெளத்த துறவி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நான்காம் தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் – அவருடைய தகவல்களை வெளிப்படுத்த வேண்டாம் எனவும் அத்தளத்துக்கு பொறுப்பான வைத்தியரால் கூறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஆனாலும் துறவியின் தந்தையை தேடும் நடவடிக்கையில் இரகசிய பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
(கிழக்கின் விடிவெள்ளி) http://www.tamilcnnlk.com/archives/277203.html 

No comments:

Post a Comment