தான் கையெழுத்திடவில்லை. அமைச்சர் பவுசி மறுப்பு.| என்னிடம் எவரும் கையொப்பம் கோரவில்லை

பெளத்த தீவிரவாதம்  தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கடிதத்தில் தான் கையெழுத்திடவில்லை என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார் . எதிர்கட்சி , ஆளும் தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கு பெளத்த அமைப்புக்களின் நடவடிக்கைகள்,தொடர்பிலும்  ஜனாதிபதியை தலையிடுமாறு கோரி   16 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட  கடிதம்  ஜனாதிபதிக்கு அனுப்பட்டது .

அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசீ, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் , பஷீர் சேகுதாவூத்,    எ.எம்.எல்.எம். அதாவுல்லா ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தவியாலருமான கபீர் ஹசிம் ,உள்ளிட்ட 16 முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் கையொப்பம்  அந்த கடிதத்தில் காணப்பட்டது
18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் 16 பேர் கையெழுத்திட்டுள்ள நிலையில் , பிரதியமிச்சர் காதர் மற்றும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ .எச் .எம் அஸ்வர் ஆகியோர் கையெழுத்திட்டிருக்க வில்லை
இந்த நிலையில் Neth FM சிங்கள வானொலிக்கு செவ்வி வழங்கியுள்ள. சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிதான் அந்த கடிதத்தில் கையொப்பம் இடவில்லை என தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த மகஜரில் கையொப் பமிடுமாறு தம்மை எவரும் கோர வில்லையென்று பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
முஸ்லிம் தலைவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் காதர் எம். பி. கையொப்பமிடவில்லையெனச் சிலர் பிரசாரம் செய்வதாகவும் இஃது உண்மைக்குப் புறம்பானதெனவும் அவர் கூறினார்.
உண்மையில் தம்மிடம் எவரும் கையொப்பம் கோரவில்லையெனவும், அவ்வாறு கோரியிருந்தால், நிச்சயம் கைச்சாத்திட்டிருப்பதாகவும் கூறிய பிரதியமைச்சர் காதர், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காதவர்கள் கோரினால் அதற்குத் தாம் உடன்படப் போவதில்லை யெனவும் சுட்டிக்காட்டினார். (வி)

No comments:

Post a Comment