ஞானசார தேரர் உள்ளிட்ட ஐந்து பேர் பிணையில் விடுதலை.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகளும் ஒரு லட்சம் ரூபா தனிநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். 
ஜாதிக பல சேனா அமைப்பு  நிப்போன் ஹோட்டலில் நடத்திய ஊடக சந்திப்பில் அத்துமீறி நுழைந்து இடையூறு ஏற்படுத்தியமை,  வட்டரெக விஜித தேரருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் அல்குர்ஆன்  தொடர்பில் தவறான கருத்து வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த தேரர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே  நீதவான் திலினி கமகே  சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்தார். (ஸ)

No comments:

Post a Comment