ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி கையொப்பமிட்டது உறுதி -முஸ்லிம் கவுன்சில்



முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தாம் கைச்சாத்திடவில்லை என்று சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இச் செய்தி தொடர்பில் உண்மைய நிலவரத்தை அறிந்துகொள்ள டெய்லி சிலோன் செய்திப் பிரிவு  முஸ்லிம் கவுன்சிலை  நேரடியாக தொடர்புகொண்டது.
இதன்போது சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் கையொப்பமிட்டார் என முஸ்லிம் கவுன்சிலின்  உயர்மட அதிகாரிகள் உறுதியாக டெய்லி சிலோன்  இணையத்திற்கு தெரிவித்தனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா போன்ற அமைப்புகள் நடத்துகின்ற தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கோரி அடங்கலாக குறித்த  கடிதம் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவினால்  ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இதில் அமைச்சர் ரவுப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, றிசாட் பதியுதீன் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்கள்  கையொப்பமிட்டிருந்தனர். 
இதேவேளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வர், ஏ.ஆர்.எம்.ஏ.காதர் ஆகியோர் குறித்த கடித்தத்தில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (ஸ)

No comments:

Post a Comment