M.ரிஸ்னி முஹம்மட்: மத விவகாரங்ககள் தொடர்பான முறைபாடுகளை கையாள பெளத்த சாசன அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விசேட போலீஸ் பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது எனவும்
விசேட போலீஸ் பிரிவுநாட்டின் மத நல்லிணக்கத்தை மேலும் மோசமடைய செய்யும் எனவும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு என்ற அமைப்பு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதுடன், அந்த புதிய போலிஸ் பிரிவை கலைத்து விடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசியலமைப்பு ஒரு அங்கீகரிக்கப்பட்ட சட்ட கட்டமைப்பிற்குள், போலீஸ் உள்ளிட்ட நிர்வாக நிறைவேற்று பொறுப்புக்கூறலை அங்கீகரிக்கிறது. அரசாங்கம் மாகாண பொலிஸ் சேவைகளை நிறுவவில்லை அதன் காரணமாக போலிஸ் மத்திய போலிஸ் திணைக்களத்தின் கீழ் உள்ளது. தற்போதைய சட்ட முறையின் கீழ் எமது பார்வையில் இப்படி ஒரு விசேட போலிஸ் பிரிவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பு படாத அமைச்சு ஒன்றின் கீழ் உருவாக்குவது அரசியலமைப்பிற்கு முரணானது.
இதன் படி தற்போது போலிஸ் இரு அமைச்சுக்களுக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது , இது போலிஸ் பொறுப்பு கூறலுக்கு சவாலாக மாறியுள்ளது. போலிஸ் திணைக்களம் , அநாட்டின் முதன்மை சட்ட அமுலாக்கல் நிறுவனமாகும். இது குற்றங்களின் தன்மை மற்றும் மத அல்லது வேறு எந்த சார்பு நிலையயும் இல்லாமல், பொது சட்டத்தை செயல்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, அண்மைகாலமாக இலங்கையில் சிறுபான்மை மதங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்வதில் பொலிஸ் அர்பணிப்பை காட்டவில்லை.
பாதுகாப்பு அமைச்சு , சட்டமும் மற்றும் ஒழுங்கும் அமைச்சு , பெளத்த சாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, ஆகியன நேரடியாக ஜனாதிபதி கீழ் இருப்பவை இவை அரசியல் வெறுப்பு பிரச்சாரங்கள் மற்றும் மத தீவிரவாதம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியுள்ளமையை காட்டியுள்ளன.
எமது பார்வையில், மற்றொரு போலீஸ் பிரிவை நிறுவுகின்றமை மேலும் தீவிரவாதிகள் கரங்களை பலப்படுத்தும் ,இந்த பிரிவு சிறுபான்மை மதங்கள் மற்றும் சிறுபான்மையினரை மிரட்ட பயன்படுத்தப்படும்.
இந்த பிரிவு உருவாக்கப் பட்டுள்ளமை மற்ற போலீஸ் அதிகாரிகள் தங்களது சட்டப்பூர்வமான பொறுப்புகளை தட்டிகழிக்க வழிவிடுவதுடன், இந்த பிரிவு பொறுப்புக்களை கடத்திவிடவும், கடமைகளை விட்டு ஒதுங்கவும் ஒரு உரிமம்மாகவும் கருதப்படலாம். இந்து மதம், கிறித்துவம் மற்றும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களை மிரட்டும் மத்திய கட்டுப்பாட்டு கருவியாக இந்த அலகு மாறும் ஒரு பெரும் ஆபத்து உள்ளது
இந்த போலிஸ் பிரிவின் உருவாக்கம் தற்போதைய அரசியல் சூழலில் நாட்டின் பொதுவான குற்றங்களை சமாளிக்க பொலிஸின் , இயலாமை அங்கீகரித்ததாக உள்ளது. சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்காக பாடுபடும் சட்டத்தரணிகள் என்ற வகையில் இந்த போலிஸ் பிரிவை கலைக்குமாரு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அரசியல் குறுக்கீடு இன்றி போலீஸ் திணிக்களத்தை சுயாதீனமாக செயல்பட வைப்பதன் மூலம் நாட்டின் சட்ட மற்றும் ஒழுங்கை வலுப்படுத்துமாறும் அதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு போலீஸ் அதிகாரியும் அனைத்து வகையான குற்றங்களை சமாளிக்க முடியுமாக இருக்கும் எனவும் கூறுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:
Post a Comment