எம்.அம்ஹர்: கடும்போக்கு பொது பல சேனா அமைப்பு நாட்டின் மத சிருபான்மைக்ளுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களின் மத விவாகாரங்களில் பலவந்தமாக தலையிட்டு
அடாவடிகளில் ஈடுபாடுவரும் நிலையில் தற்போது நாட்டின் சிவில் நிர்வாகத்துக்குள் இருக்கும் முஸ்லிம்கள் தொடர்பான விபரங்களை திரட்டி வருவதாக அறிய முடிகிறது .
குறிப்பாக கொழும்பில் பல்வேறு அரச சிவில் நிர்வாக பிரிவிகளில் கடமையாற்றும் முஸ்லிம்கள் தொடர்பான விபரங்களை திரட்டும் நடவடிக்கையை அந்த அமைப்பு மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது .
அரச நிர்வாக பிரிவுகளில் கடமையாற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை , அவர்களின் பதவி , அவர்களின் தகமைகள் , அரசியல் பின்னணி போன்ற விபரங்களை பொது பல சேனா அமைப்பு திரட்டி வருவதாக அறிய முடிகிறது.
இஸ்லாமிய உணவு முறை , இஸ்லாமிய உடை , ஆகியவற்றுக்கு எதிராக செயல்பட்டுவரும் இந்த கடும்போக்குவாதம் தற்போது அதன் செயல்பாடு எல்லைகளை விரிவு படுத்தி முஸ்லிம் மக்கள் தொகை பரம்பல் முஸ்லிம்களின் காணி , நிலம் , மீள் குடியேற்றம் என கைவைதுள்ளதுடன் தற்போது அரச சிவில் நிர்வாக பிரிவுகளில் கடமையாற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களையும் திரட்ட தொடங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கத

No comments:
Post a Comment