சமயங்களின் செயற்பாடுகள் தொடர்பான விசேட பொலிஸ் நிலையம் இன்று திறந்து வைப்பு

(அஷ்ரப் ஏ சமத்)
சமயங்களின் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகள் சம்பந்தமான விசேட பொலிஸ் நிலையம் இன்று கொழும்பு 7 இல் உள்ள பௌத்த மத விவகார அமைச்சின் 7ஆம் மாடியில் இன்று காலை 09.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதமர் தி. மு. ஜயரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.பி. திசாநாயக்க, பொலிஸ் மாஅதிபர் எம். கே. இலங்கக்கோண். ஆகியோரும் கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தை திறந்துவைத்தனர்.

No comments:

Post a Comment