காணியை கொள்ளையடித்து அதனை உடமையாக்கவதற்கு முஸ்லிம்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள்.

சிகல உருமய கட்சியின்  அமைச்சர்  பாட்டிலி சம்பிக்க ரணவக்க இன்று(28) அவரது கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போது –  (அஸ்ரப் ஏ சமத்) நான் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது கிழக்கில் குறிப்பாக பொத்துவில் லகுகலையில முஸ்லீம்கள் லகுகளை வனப் பிரதேசத்தில் உள்ள காணியை கொள்ளையடித்து அதனை உடமையாக்கவதற்கு எவ்வளவோ முயற்சித்தார்கள். பாராளுமன்றத்தில் உள்ள கிழக்கில் உள்ள சகல முஸ்லீம் அமைச்சர்கள் தொட்டு பாராளுமன்ற உறுப்பிணர்கள்  வரை லகுகளை உள்ள வனவள காணியை
கொள்ளையடிக்க முயற்சித்தார்கள். நான் விட்டுக்கொடுக்கவே வில்லை. அதில் மிகவும் காரசாரமாக எனது பொறுப்பை நிறைவேற்றினேன். ஜனாதிபதி ஊடாக எண்னை பணித்தார்கள். அமைச்சர் பேரியல்  மையோன் முஸ்தபா என பல அமைச்சர்கள் எனது பலமுறை எனது அமைச்சிற்கு வந்து பேசினார்கள். ;அரசின் இருந்த முஸ்லீம் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட விலகி எதிர்கட்சியில் சென்று உட்கார்ந்தார்கள். நான் அசையவே இல்லை. ஆனால் நான் அன்று எடுத்த திர்க்கமான முடிவில்தான் இன்று லகுகளை பொத்துவில் வன பகுதி பௌத்த பூமியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதே போன்று தான் அம்பாறையில் தீகவாபி பிரதேசத்தின் காணியில்  சவுதி வீடமைப்புத் திட்டத்;தினை அமைத்து அங்கு 100 ஏக்கர் காணியில் வீடமைப்புத்திட்டமொன்றை நிறுவினார்கள். இதற்காக உயர் நீதிமன்றம் சென்று  சிகல உருமய கட்சி வழங்கு தாக்கல் செய்து இதனை  தடுத்தி நிறுத்தினோம். இவ் வழக்கில் சிகல உருமய கட்சி வெற்றி பெற்றது. தீகவாபியில் எஞ்சியுள்ள புனித பூமி பாதுகாக்கப்பட்து.  ஆகவேதான் இன்று வடக்கில்  வில்பத்தில் வாழுகின்ற 72 முஸ்லீம் குடும்பங்களும் உடனடியாக அவ்விடத்தல் இருந்து அகற்றப்படல்  வேண்டும். ஆனால் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் கட்டாயம் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.  வடக்கில் உள்ள வில்பத்துக் காணியை முற்று முழுதாக பாதுகாப்பதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அக் காணியில் ஒர் அங்குலமேனும் காணிக் கொள்ளையிடுவதற்கு  யாருக்கும் சிகல உருமய விடாது. இவ் விடயத்தில் நாம் கன்னும் கருத்துமாகவே இருப்போம். இன்று திறந்து வைத்த பொலிஸ் நிலையத்தினால் நடைபெறப்போவது ஒன்றுமே இ;ல்;லை. இந்த நிலையத்த்தை திறந்து இருப்பது பொதுபலசேனா அல்லது சிங்கள ராவயவுக்கு பலத்தை கட்டுப்படுத்துவதற்கே  ஆனால் அரசு தௌஹீத்தை ஜாமஆத்தை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் இந்த மத விவகாரங்களுக்கான  பொலிஸ் நிலையத்திற்கு   எவ்வித அதிகாரமும் இல்லை. சகல மதங்களுக்கும் ஒரு நீதி நியாயம் சட்டம் பௌத்த  மதத்தை பாதுகாக்க  கடந்த காலத்தில் சிகலஉருமையினால் கொண்டுவரப்பட்ட சிங்கள பௌhத்த சட்டத்தை நாங்கள் பாராளுமண்றம் ஊடாக கொண்டுவந்தோம். அதனை அன்று அமுல்படுத்த சிலர் விடவில்லை. அதனை செயற்படுத்திருந்தால் பௌத்த மதத்துக்கு அன்நிய மதங்களினால் இழக்கு இடம் பெற்றிறுக்காது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார் நாங்கள் இந்த அரசின் கெசினோ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளோம். இவ் விடயம் சம்பந்தமாக அரசுக்கு சிவப்பு விளக்கு காட்டப்பட்டுள்ளது. அரசுக்குள்ளும் பாராளுமன்றத்திலும் நாடு பூராவும் இந்த கெசினோவுக்காக போராடுவோம். அரசு கொண்டுவரும் கெசினோவினோல் இலங்கையில் குறிப்பாக கொழும்பில ;;வாழும் மக்களை கெசினோக்கு கொண்டு சென்று இந்த நாட்டை குட்டிச் சுவராக்க உள்ளது. என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்

No comments:

Post a Comment