கம்பளை முஸ்லிம்களை இலக்குவைத்த பொதுபல சேனா - பள்ளிவாசலை சட்டவிரோதம் என்கிறது

கம்பளை முஸ்லிம் செறிவாக வசிக்கும் பெபிளை பகுதிக்கு; 23.04.2014 பொதுபல சேனா பௌத்த தேரர்களை உள்ளடக்கிய குழுவொன்று வருகை தந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றதாக இப்பகுதி முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியில் முஸ்லிம்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலின் பிரதான மண்டபத்தின் மேல் மாடிப் பகுதி பெபிளை பாதையை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழுவினர் தெரிவித்து இப்பகுதியைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றதாகவும் இப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கம்பளை நகர சபையின் முன்னாள் உப தலைவர் எம். ஹாரிஸ் குறிப்பிடுகையில்,

இன்று பௌத்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் இரு வேன்களில் இப்பகுதிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லர். முஸ்லிம்களின் ளுஹர் தொழுகை நேரத்தின் போது இவர்கள் வருகை தந்த போதிலும் அங்கு குழுமியிருந்த முஸ்லிம்களுடன் இக்குழுவினர் எதுவித பேச்சுக்களிலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை இப்பகுதியில் பாதுகாப்புக்காக பொலிசாரும் கடமையில் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment