கொவிட் -19 கட்டாய ஜனாஸா எரிப்பு - ஐந்தாண்டுகள் பூர்த்தி நினைவு தின நிகழ்ச்சி


























எவ்வித விஞ்ஞான அடிப்படைகளுமின்றி  அநியாயமாக கொவிட் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் 06 2025 அன்று கொழும்பு  06 மெரைன் கிரேண்ட் மண்டபத்தில் அதன் நினைவு தின நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றன. இதனை இலங்கை இஸ்லாமிய மற்றும் சமூக அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் 
ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன. 


1. All Ceylon Jammiyyathul Ulama (ACJU)

2. National Shoorah Council (NSC)

3. Muslim Council of Sri Lanka (MCSL) 

4. Regain Peace Sri Lanka (RPSL) 

5. Colombo District Masjid Federation (CDMF)

6. Memon Association of Sri Lanka 

7. All Ceylon YMMA Conference

8. Association of Muslim Youth of Seilan (AMYS) 

9. All Ceylon Union of Muslim League Youth Fronts (ACUMLYF)

10. Sri Lanka Jama’athe Islami 

11. Salamah Society 

12. Supreme Council of Sufi Thareequas(SCOT)  

13. Sri Lanka Muslim Civil Society Foundation 

14. Conference of Sri Lankan Malays (COSLAM)

15. Council of Community Initiatives (CCI)  

மேற்படி அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவை அமைத்து, அக்குழுவின் தலைவராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் பஹ்ஜி அவர்களை நியமித்தது. அத்துடன் இக்குழு நினைவு தின நிகழ்வின் தலைவராக தேசிய சூரா சபையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் அவர்களை நியமித்தது. 

இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர், பிரதி சபாநாயகர், கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள், நலன் விரும்பிகள், நாடு பூராவிலுமுள்ள பல சமூகங்களையும் சார்ந்த ஆண் பெண் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் நோக்கங்கள்:

1.வரலாற்றை நினைவுபடுத்தல் – முஸ்லிம் சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட இந்த அநியாயத்தை மறக்கவோ, அழிக்கவோ முடியாதவாறு நிலைநாட்டல். 

2.நினைவு கூறல்: கட்டாய தகனத்திற்கு உட்படுத்தப்பட்டவர்களை நினைவு கூறல். 

3.துஆ மற்றும் பிரார்த்தனை: கட்டாயத் தகனம் செய்யப்பட்டவர்களுக்கும் மற்றும் ஒட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் சிறப்பு துஆ பிரார்த்தனை புரிதல்.

4.தடுப்பு மற்றும் ஆதரவு - இந்த நாட்டில் எந்தவொரு தனிநபருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைத்தல்.

நினைவு தின நிகழ்வுகள்:

நிகழ்ச்சிகளை திருக்குர்ஆன் வசனங்களை ஓதி அல்-ஹாபிழ் அப்பான் மக்தூம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தலைமை மற்றும் வரவேற்புரையை நிகழ்வின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் அவர்கள்: அடக்கலாம், தகனம் செய்யலாம் என்று இரு முறைகள் இருந்தும் எமக்கு அந்த உரிமை கிடைக்கவில்லை. இறுதியில் சுமார் 500 கி.மீ. தூரத்தில்  கொண்டு போய் அடக்கம் செய்ய அனுமதித்தனர். ஆனால் எமது கலாசாரத்தில் (பலர்) தொடர்ந்து 40 நாட்கள் அடக்கஸ்தளம் சென்று பிரார்த்தனை புரிவர். முற்றும் சிலர் வாராந்தம் சென்று தரிசித்து பிரார்த்தனை புரிவர். ஆனால் இப்போது அப்படி செய்யலாமா என கேள்வி எழுப்பினார்.

அடுத்து "நெருப்பில் குளித்த அடையாளம்" கட்டாயத் தகனத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களின் வலியை நினைவுகூரும் பாடல் ஒளிபரப்பப்பட்டது. இதனை எழுதி இசையமைத்து இருந்தார் புத்தளம் எஸ்.ஏ.சீ.பீ. மரிக்கார் அவர்கள்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ பொதுச் செயலாளர் உரையாற்றுகையில்: அநியாயங்களை நாம் மறந்து விடக் கூடாது. இது சூரா புறூஜில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடு. போஸ்னியாவில் போன்று இங்கு தகனம் செய்யப்பட்டவர்களுக்கான அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தூபி அல்லது இடம் அமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கவிஞர் சகோ. றவூப் ஹஸீர் அவர்களின் “ஜனாஸா எரிப்பு” என்ற உணர்வுபூர்வமான கவிதை கூடியிருந்த பலரின் கண்ணீரோடு சங்கமமானது. அடுத்து கெலணிய பல்கலைக்கழக பேராசிரியர் கல்கந்தே தம்மானந்த தேரர்: முஸ்லிம்களின் இறுதிக் கிரியை பற்றிய பல விடயங்களை நான் இப்போது தான் அறிந்து கொண்டேன். உண்மையில் ஒரு அன்புக்குரியவருக்கான இறுதி மரியாதை செய்யப்படாமல் இருப்பது அல்லது தவறிப்போவது மிகக் கடினமான விடயமாகும் எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர் ஏ.எம். உமரின் சிங்கள மொழியிலான “விருதுப்” பாடல் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜனாஸா எரிப்பு தொடர்பா வரலாறுகள் அடங்கிய “தீயில் எரிந்த அந்த 333 நாட்கள்”என’ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

தொடர்ந்தும் முன்னாள் பா.உ. சட்டத்தரணி திரு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உரையாற்றுகையில்: இலங்கை வரலாற்றில் பல கருப்புத் தினங்கள் இருக்கின்றன. 1983 ஆண்டை நாம் ஞாபகம் செய்வது போலவே இதுவும் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் தான். இன்று நான் உயிரோடு இருப்பது அன்று 1983 ல் எமது பக்கத்து வீட்டு முஸ்லிம் கொழும்பில் அடைக்களம் தந்ததுனால் தான். வீட்டை எரிக்க வி;லை ஒரு பௌத்த தேரர் பாதுகாத்ததினால் தான். எப்பொழுதும் ஒரு சமூகம் அநீதி இழைக்கப்படும் போதும் அதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். தனக்கு தனக்கு என்றால் தான் சுழகு படக்க படக்கு என்றுமாம் என்று தமிழிலே சொல்லப்படுவது போல. மற்றவர்களினதும் நன்மையைக் கவனிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இறுதி உரையாக போதகர் சகோ. சார்லஸ் தோமஸ் அவர்களுடைய உரை இடம்பெற்றது. அதில் அவர்: நாம் எப்போதும் எமது மதம் மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். மட்டுமல்லாமல் பேராசிரியர் கல்கந்தே தம்மானந்த தேரர் குறிப்பிட்டார் அவருக்கு இப்போது தான் பல விடயங்கள் அறியக் கிடைத்தது என்று. அவரின் அந்த வார்த்தையின் மூலம் ஒரு செய்யதியைச் சொல்கிறார். அதாவது பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எல்லோரும் எமது மார்க்க விடயங்களை; பகிர்ந்து கொள்ளும் ஒரு பொறிமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அடுத்து ஒரு அழகான ஆங்கில மொழி மூல கவிதையொன்றை சகோதரி சப்னம் முஸ்ஸம்மில் வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அனுபவங்களும், மனக் கவலைகளும் அடங்கிய ஒரு வீடியோ க்லிப் ஒளிபரப்பப்பட்டது. அடுத்து துஆப் பிரார்த்தனையை அஷ்-ஷைக் ஏ.ஜே. அப்துல் ஹாலிக் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக சுமார் 12 மணியளவில் அஷ்-ஷைக் எம்.எச்.எம்.புர்ஹான் பஹ்ஜி அவர்களுடைய நன்றியுரையுடன் ஸலவாத்துக் கூறி நிகழச்சிகள் யாவும் இனிதே முடிவுற்றது.

நிகழ்சிகள் சகோததரர்களான ஆஷிக் அமீனுத்தீன் மற்றும் ஹாபிஸ் அப்துல் றஹ்மான் ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டன்.  
























அஷ்-ஷைக் டீ.ஹைதர் அலி
ஊடகப் பிரிவு - நினைவு கூரல் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு 





No comments:

Post a Comment