ஞானசார தேரர் ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை

Gnanasara-Thero..._CIகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் சட்டத்தரணி மைத்திரி குணரட்னவை திட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஞானசார தேரரை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டார்.
மைத்திரி குணரட்ன மற்றும் கொம்பனித் தெரு பொலிஸில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தவிர, ஞானசார தேரர் புனித குர்ஆனை அவமதித்தமை, ஜாதிக பல சேனா அமைப்பின் ஊடக சந்திப்புக்குள் புகுந்து குழப்பியமை ஆகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் நேற்று நடைபெற்றன.
வழக்கில் ஆஜரான கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவங்கள் தொடர்பான காணொளிகள் ஆய்வுகளுக்காக மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு அறிக்கைகள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் சம்பவம் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment