தூய்மையான நாளை அமைப்பின் தலைவரான ரத்ன தேரர் தனது தூய்மையைப் பாதுகாத்துக் கொண்டு பைத்தியம் விளையாடாமல் ஒதுங்கியிருந்தால் நல்லது என்றுதான் நாம் அவர்களுக்குத் தெரிவிக்கின்றோம் என பொதுபல சேனாவின்
செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
கொண்டுவருவது சிறந்த விடயங்களாக இருக்கலாம். ஆனால், இவர்கள் தனக்குப் பின்னால் கோர்ட் ஆடை அணிந்து கொண்டிருப்பவர்கள் யார் என்பதைப் பற்றி சிந்திக்காமல் செயலில் இறங்கியுள்ளனர். இவர்களின் பின்னால் உள்ளவர்கள் பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் செயற்படுகின்றார்கள். தயவு செய்து தனது தூய்மையைப் பாதுகாத்துக் கொண்டு ஒதுங்கியிருக்குமாறு நாம் அவரிடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்
No comments:
Post a Comment