கருமலையூற்று பள்ளிவாசாலை உடனடியாக மீள்நிர்மாணம் செய்ய ஜனாதிபதி உத்தரவு

திருகோணமலை கருமலையூற்றில் அகற்றப்பட்ட ஜும்ஆப் பள்ளிவாசாலை உடனடியாக மீள நிர்மாணித்து கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலின் பின்னரே ஜனாதிபதி குறித்த பள்ளிவாசலை உடனடியாக மீள நிர்மாணித்து கொடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசத்துக்குள் நுழைவதற்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தற்பொழுது அங்கு விஜயம் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவன்சில் தலைவர் என்.எம். அமீன் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார். (ஸ) http://dailyceylon.com/

No comments:

Post a Comment