ஞானசார தேரர் பணத்தைப் பெற்றுக் கொண்டு மதத்தை அழிக்க முயல்கிறார் : மேர்வின்

பௌத்த பிக்குகளின் மரியாதையை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் மேர்வின் சில்வா பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர குறித்து   குறிப்பிட்டுள்ளார்.  கண்டியில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கௌதம புத்தரின் வாழ்க்கை நெறியைப் பின்பற்றும் பௌத்த பிக்குகளின் வாயிலிருந்து வெளி வரும் வார்த்தைகள் தூய அர்த்தமுடைய பண்பனவையாக இருக்க வேண்மென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அடேய், நீ, வா, போ” போன்ற வார்த்தைகள் பௌத்த பிக்குகளின் வாய்களிலிருந்து வெளிவரக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் இழிவான சொற்களைப் பயன்படுத்தினால் அது பௌத்த மதத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடும் சொற்களை பௌத்த மத தேரர்கள் பயன்படுத்துவதன் மூலம் உலக சமூகம்இ பௌத்த மத பிக்குகள் இவ்வாறுதான் பேசுவார்கள் என பிழையாகக் விளங்கிக்கொள்ளக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் நடவடிக்கைகள்இ வார்த்தைகள் பண்புகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். கௌதம புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இழிவான சொற்களை பேசிய பௌத்த பிக்கு ஒருவரின் வாயிலிருந்து புழுக்கள் விழுந்ததாகவும்இ ஞானசார தேரரின் நடவடிக்கைகளும் அவ்வாறு அமைந்துள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளர்.
ஞானசார தேரர்  யாரிடமிருந்தோ பாரியளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மதத்தை அழிக்கும் சூழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்து வருவாக அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.இதேவேளை அமைச்சர் மேர்வின் சில்வாவின் கன்னத்தில் அறைவேன் என அண்மையில் ஞானசார தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-TC http://lankamuslim.org/

No comments:

Post a Comment