அவுஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய வாழ் பௌத்தர்களுடனான சமய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே அவர் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளார். ஆனால் தேரரின் விஜயத்தை அங்குவாழும் சிங்களவர்கள் எதிர்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
இலங்கையில் சர்ச்சையை கிளப்பி அளுத்தகம வன்முறைக்கு காரணமானவர் எனக் கூறப்படும் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான விசாவை அவுஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது. அளுத்தகம சம்பவத்துக்கு பின்னர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்திற்காக விண்ணப்பித்திருந்த ஞானசாரருக்கு விசா வழங்காமல் இந்நாடுகள் நிராகரித்திருந்தன.
இந்நிலையில் அடுத்தமாதம் அவுஸ்திரேலியாவில் நடக்கும் சமய நிகழ்வொன்றில் கலந்துகொள்ள ஞானசாரருக்கு அவுஸ்திரேலியா விசா வழங்கி இருக்கிறது. அதேவேளை, ஞானசார தேரர் அவுஸ்திரேலியாவுக்குள் வரக் கூடாது என அவுஸ்திரேலிய வாழ் பௌத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பொதுபல சேனா பௌத்த மதத்தை அடிப்படையாக கொண்ட ஓர் தீவிரவாத அமைப்பு எனவும் வர்ணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஞானசாரரின் பேச்சுக்களும், நடவடிக்கைகளும், பௌத்த மத வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை என அவுஸ்திரேலிய பௌத்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் எனவும் அறிய முடிகிறது.
http://newslnk.com/
No comments:
Post a Comment