அலுத்தகம தர்ஹா நகர் சம்பவங்களுக்கு முதலில் கைதாகிய மௌலவி அஸ்கர் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக…. தேரரை அடிக்க வேண்டம் என அழுதோம். அவர்கள் கேட்கவில்லை. அவரை அடித்தார்கள் என ஒரு ‘சாட்சி’ பொய் சாட்சி வழங்கினார்.
அலுத்தகம தர்ஹா நகர்: காதியவத்த பெளத்த தேரர் மீதான தாக்குதல் தொடர்பாக முதலில் கைதாகிய மௌலவி அஸ்கர் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக வழங்கிய தகவல்கள்:
சம்பவத்தின் ஆரம்பம்
ஜீன் மாதம் 12 ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் காதியவத்தையில் உள்ள எனது வீட்டின் முன் எனது மூத்த சகோதரன் நின்று கொண்டிருதார். குறித்த தினத்தன்று எனது தம்பி பணியாற்றும் கடை உரிமையாளரின் திருமண நாள் எனது உம்மா தங்கையை திருமண வீட்டுக்கு அழைத்து செல்லவதற்காக மூத்த சகோதரன்முச்சகற்ற வண்டியொன்றை எடுத்து வருவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார் . முச்சகரன் வண்டி வீட்டுக்கு முன் நிறுத்தப் பட்டிருந்தது எனது சகோதரன் முச்சகர வண்டுக்கு இடது பக்கமாக மோட்டார் சைக்கிளை வைத்துகொண்டிருந்தார் .அப்போது தேரரின் வாகனம் வந்தது இரண்டு மூன்று தடவை ஹோன் சத்தம் ஒலித்தது . எனது சகோதரன் மோட்டார் சைக்கிளை முச்சக்கர வண்டிக்கு பின்னால் நிறுத்தி வைத்தார் .
வாக்குவாதம்
மோட்டார் சைக்கிள் கற்றப் பட்டதும் தேரரின் வாகனம் முன்னே சென்று நிறுத்தப் பட்டது. வாகனத்தில் இருந்து இறங்கிய வான் சாரதி எனது சகோதரனுக்கு தூஷண வார்த்தைகளால் பேச ஆரம்பித்தார். போருக்க முடியாத நிலையில் சகோதரனும் பதிலுக்கு பேச ஆரம்பித்தார் பின் எனது தம்பி உள்ளே இருந்து ஓடி வந்தார் நாமும் கதவை திறந்த படிநின்றுகொண்டிருந்தேன் அப்போது மூத்த சகோதரனுக்கும் சாரதிக்கும் இடையில் வாய் தர்க்கம் கடுமையானது எனது சகோதரன் வாகன சாரதியை பிடித்து தள்ளியதுடன் இரண்டு அடியும் விட்டார் . அப்போது வாகனத்தில் இருந்த தேரர் இரங்கி வந்தார் . வாகன சாரதி தேரரை அவ்விடத்தில் நிறுத்தி விட்டு வாகனத்தை ஓட்டி சென்றார்
தேரருடன் உரையாடல்
இதன் பின்னர் தேரருடன் நடந்த சம்பவம் தொடர்பில் கூறிக்கொண்டு இருந்தேன் . தேரரும் நல்ல முறையில்தான் என்னுடன் பேசினால்.சற்று நேரத்தில் அந்த இடத்துக்கு பத்திராஜகொட விஹாராதிபதி வந்தார்.வாகன சாரதி சென்று சொன்னதை அடுத்து அந்த தேரர் எனது வீட்டுக்கு முன்வந்து மிகவும் மோசமான வார்த்தைகளால் ஏசினார் .அப்போது அந்த இடத்தில் வாகன சாரதி இருக்கவில்லை .என்றாலும் வாகன சாரதி சிறுதி நேரத்தின் அங்கு வந்தார் .எமது மாமா ஒருவர் அங்கு வந்து பத்திராஜகொடதேரருடன் பேசினார் பின்னர் தேரருடன் கலந்துரையாடியதுடன் நடந்த தவறுக்காக அவர்களிடம் மனிப்பு கோரினார் . பின்னர் எமது மூத்த சகோதரனும் தம்பியும் திருமண வீட்டுக்கு சென்றனர் . நான் தேரர்களும் உரையாடிக்கொண்டு இருந்தேன் .
பொலிசாரால் கைது
இச் சந்தர்பத்தில் இரு மோட்டார் போக்குவரத்து பொலிசார் குறித்த இடத்துக்கு வந்தனர் அப்போது பத்திராஜகொட தேரர் என்னை காட்டி இவர்தான் சாரதியைத் தாக்கியவர் எனக் கூறவும் அவர்கள் என்னை பொலிசாரிடம் அழைத்து சென்றனர். 1:30 மணியளவில் போலிஸ் நிலையத்தை அடைந்தேன் அங்கு என்னிடம் நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டது .
குருந்துவந்த தேரர் நான் அவரை அடிக்க வில்லை என போலீசில் கூறினார்
அங்கு வந்த குருந்துவந்த தேரர் இவர் என்னை அடிக்க வில்லை இவரின் அண்ணன்தான் சாரதியை அடித்து தள்ளினார் என்றார். பத்திராஜகொட தேரர் போலிஸ் நிலையத்துக்குள் சப்தமிட்டு கொண்டிருந்தார் . குருந்துவந்த தேரர்தன்னை அடிக்கவில்லை என தெரிவித்தால் எவரும் இங்கு வரவேண்டியதில்லை என அங்கு வந்திருந்த சாட்சிகளையும் பொலிஸ் பொறுப்பதிகாரி விரட்டினார் .
என்றாலும் பத்திராஜகொட தேரர் விடவில்லை ஏறத்தாள இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக போலிஸ் நிலையத்துக்குள் தங்கியிருந்து கைத் தொலைபேசி மூலம் தொடர்புகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தார் .பின்னர் அங்கு அதிகமானோர் திரள ஆரம்பித்தனர் . பத்திராஜகொட தேரர்உள்ளே இருந்து அங்கெ வந்திருப்பவர்களுடன் பேசிவிட்டு பின்னர் உள்ளே வருவார் , பொலிசாருடன் பேசுவார் . இப்படியே திரித்தார் .
பத்திராஜகொட தேரர் நடவடிக்கை
பத்திராஜகொட தேரர் பொலிசாரை நோக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்றேல் நிலைமை விபரீதமாகும் என்றார் அப்படியானால் குருந்துவத்த தேரர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறவேண்டுமென போலிஸ் பொருப்பதிகாரி கூறினார் லங்காமுஸ்லிம். குருந்துவத்த தேரர் வற்புறுத்தலின் பேரில் வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்தார் .
இதன் பின்தான் என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டது பின்னர் குருந்துவத்த தேரர் வைத்தியசாலையில் அட்மிடானார்
எனது இரு சகோதர்கள் கைது
3:30 மணிஇருக்கும்போது போலிஸ் நிலையத்தைச் சுற்றி நூற்றுகணக்கானவர்கள் ஒன்று திரண்டனர் . எனது சகோதர்களை போலீஸ் பொருப்பதிகாரி 3:30 அளவில் கைது செய்துள்ளார் என்றாலும் போலிஸ் நிலையத்தை சுற்றி அதிகானவர்கள் கூறியிருந்ததால் எனது சகோதர்களை 5:30மணியளவில்தான் போலிஸ் நிலையம் கொண்டுவந்தனர் .
>21 நாள் விளக்கமறியல்
மலை 5:30 மணிக்கு என்னையும் எனது இரு சகோதர்களையும் விளக்க மறியலில் போட்டனர் .காலில் விழுந்து மனிப்புப் கேட்குமாறு எம்மை பணித்தனர் . போலீசில் மூன்று பேரிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் எம்மை களுத்துறை சிறை சாலைக்கு அழைத்து சென்றனர் . சிறை சாலையில் 21 நாள் இருந்தோம்
பொய்யான வாக்குமூலம்
தேரரை அடிக்க வேண்டம் என அழுதோம் .அவர்கள் கேட்கவில்லை .அவரை அடித்தார்கள் என ஒரு ‘சாட்சி’ பொய் சாட்சி வழங்கினார் அவரது மனைவி இப்படி சாட்சியம் வழங்கினார் நான் சொல்வது பொய் சாட்சியாக இருந்தால் நானும் எனது கணவனும் , பிள்ளைகளும் வாகனத்தில் மோதி சாகவேண்டும் என சாட்சியம் அளித்தார் என்னை காட்டி நான் அடித்ததாகவும் கூறினார் . குருந்துவத்த தேரரை வற்புறுதியே மனம் மாற்றினார்கள்
விளக்கமறியளில் எம் மீது தாக்கினர் :
எனது தம்பியை போலிஸ் நிலையம் அழைத்து வருகையில் தேரர்கள் தாக்கியுள்ளனர் .அதனால் அவரது முகம் வீங்கியிருந்தது. விளக்கமறியளில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு வந்த தேரர்கள் விளக்க மறியலில் இருந்த சக கைதிகளை பார்த்து இவர்களை அடியுங்கள் கொன்றுவிடுங்கள் எனச் சப்பதமிட்டனர் .இவர்களை கொன்றால் உங்களை வெளியே எடுப்போம் என தேரர்கள் கத்தினர் , விளக்கமறியளில் வைக்கப்பட்டிருந்தபோது காலில் விழுந்து மன்னிப்பு கோருமாறு வற்புறுத்தினர். அப்போது அங்கிருந்த பெரும்பான்மை கைதிகள் எம்மைத் தாக்கினர் . பின்னர் விளக்கமறியளில் இருந்த பெரும்பான்மை கைதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் .
வீடு தாக்கப்படவில்லை: தர்ஹா நகர் வன்முறையின்போது எமது வீடு தாக்கப்படவில்லை .சம்பவ தினத்தன்று மூன்று முச்சகன்ர வண்டிகளில் வீட்டை உடைக்க வந்திருகிறார்கள் எனினும் பொலிசாரின் தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த மௌலவி தர்ஹா நகர் இல்ஹாருள் இஸ்லாம் அரபுப் கல்லூரியில் கல்வி பயின்று தற்போது தர்ஹா நகர் குர்ஆன் மதரச ஒன்றில் கடமையாற்றி கொண்டிருக்கிறார் .முஸ்லிம் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவற்றை அவர் தெரிவித்துள்ளார். லங்கா முஸ்லிம் இணையதளத்துக்காக தட்டச்சு செய்தவர் சஹீத் அஹமத்

No comments:
Post a Comment