பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கை பௌத்தர்களிடம் மனிப்பு கோரவேண்டும்: ஞானசாரர்

POபாப்பரசர்  பிரான்ஸிஸ் இலங்கை சிங்கள பௌத்தர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என பொதுபல சேனா இப்போது தெரிவித்துள்ளது . இலங்கையை கிறித்தவர்கள் காலனி நாடாக கைப்பற்றி இலங்கையில்
அவர்கள் செய்த குற்றங்களுக்கு பாப்பரசர்  பிரான்ஸிஸ் இலங்கை சிங்கள பௌத்தர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என தீவிரவாத இயக்கமான  பொதுபல சேனாவின் செயலாலர கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .
சில மாதங்களுக்கு முன்னர் பாப்பரசர்  பிரான்ஸிஸ் இலங்கை  வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிதிருந்த  பௌத்த அமைப்புகளான பொதுபல சேனாவும், ராவணா சக்தி அமைப்பும்இலங்கையில் மத நல்லிணக்கம் இல்லையென பாப்பரசர் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் தெரிவித்திருந்தது
இது தொடர்பாக பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கீழ்வருமாறு  தெரிவித்திருந்தார், பாப்பரசர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மத நல்லிணக்கம் இலங்கையில் இல்லையெனத் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும்.அதன் பின்னர்தான் இங்கு வரவேண்டும்.
எமது நாட்டில் மதங்களுக்கிடையே மோதல்கள் கிடையாது. பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் இங்கு நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். மதங்களிடையே மோதல்கள் கிடையாது. ஒரு சில அடிப்படைவாத மதச் சக்திகளின் நடவடிக்கைகள் காரணமாகவே சிறு சிறு பிரச்சினைகள் தலைதூக்குகின்றனவே தவிர, முழு நாட்டிலும் மத நல்லிணக்கம் காணப்படுகிறது.
எனவே, இங்கு மத நல்லிணக்கம் இல்லையென்று கூறிய கருத்துகளுக்கு பாப்பரசர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார் .
இவர் தெரிவித்த இந்த கருத்தின் பின்னரே அளுத்கம பேருவளை உள்ளிட்ட பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதம்  பொது பல சேனா உள்ளிட்ட பெளத்த தீவிரவாத அமைப்புகளினால் முன்னெடுக்கப் பட்டமையும் பல நூறு கோடி ரூப சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன் பல உயிர்களும் பலிஎடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
lankamuslim.or

No comments:

Post a Comment