ரவூப் ஹக்கீமையும் விசாரிக்க வேண்டும்: ஞானசார தேரர் புலம்பல்

gnanasaraஅளுத்கம, பேருவளை மற்றும் தர்காநகர் சம்பவங்கள் குறித்து என்னிடம் மாத்திரம் விசாரணை நடத்துவது அநீதியானது. இதுதொடர்பாக சர்வதேசத்துக்கு பொய்யான தகவல்களை வழங்கிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டட முஸ்லிம் தலைவர்களிடமும் விசாரணைகள் நடத்த வேண்டுமென ஞானசார தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு முன்னால் அழுது புலம்பியவாறு சர்வதேசத்துக்கு திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வழங்கினார் எனவும் அடுத்த தேர்தல்களில் வாக்குகளை பெறும் நோக்கில் அவர் அவ்வாறு செயற்பட்டதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
ஆறு மணி நேரத்திற்கு மேலாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்திய போதிலும் 12 கேள்விகளை மாத்திரமே தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment