சஹீத் அஹமத் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASE)த்தினால் சட்டமா அதிபர் பாலித பெர்னான்டோவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டவிகளை நிராகரித்துள்ள பொது பல சேனா
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றசாட்டுகள் தொடர்பில் விவாததுக்கு வருமாறும் அழைத்துள்ளது .
நேற்று பொது பல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியாளர் மாநாட்டில் பொது பலசேனா அமைப்பு மேற்படி தெரிவித்துள்ளது .
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASE) சட்டமா அதிபர் பாலித பெர்னான்டோவுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் பொதுபல சேனாவுக்கு எதிராக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளதுடன் பொதுபல சேனாவினால் நாட்டில் சட்டம், வெளிப்படையான மீறப்படுகின்றது என்றும் அப்படியான சந்தர்ப்பங்களில் பொலிசார் சட்டம் வலியுறுத்தும் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளனர் எனவும் குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. http://lankamuslim.org/

No comments:
Post a Comment