பாணந்துறை பிரதேச முஸ்லிம்களை சோகத்தில் ஆழ்த்தியா மரணம் – படங்கள்

பாணந்துறை பிரதேச பெருன்பான்மை இன அரசியல்வாதி ஒருவரின் உயிரிழப்பு பாணந்துறை பிரதேச முஸ்லிம் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆரியபால சில்வா கடந்த வாரம் உயிரிழந்தார். இவர் உயிருடன் வாழ்ந்த காலங்களில் பாணந்துறை பிரதேச மக்களுடன் குறிப்பாக முஸ்லிம் மக்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகக்கூடிய ஒருவராக இனங்காணப்பட்டிருந்த்தார்.
இவரது மரணம் தொடர்பில் பாணந்துறை பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவர் எமது திஹாரிய நியூஸ் இணையத்துக்கு கருத்துத் தெரிவிக்கையில்:
“மறைந்த பிரதேச சபை உறுப்பினர் ஆரியபால சில்வா எமது பாடசாலை அபிவிருத்தி சம்பந்தமான பல விடயங்களுக்கு முன்னிண்டு செயற்பட்ட ஒருவர். அதேபோன்று எந்த ஒரு பிரச்சினை என்றாலும் எந்த நேரத்திலும் நாம் அவரை த் தொடர்புகொள்ள முடியும். அதேவேளை எம்முடன் இணைந்து எமக்காக் குரல் கொடுத்த ஒருவர். அவரது இழப்பு எமக்கு பேரிழப்பாகவே காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
மறைந்த பிரதேச சபை உறுப்பினர் ஆரியபால சில்வாவின் பூதவுடல் கடந்த ஞாயிற்றுக் கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
010203040506070809

No comments:

Post a Comment