හිමියෝ දැවෙන අතරේ අබ්දුල්ලා හඬා වැටෙයි - அம்பேபுஸ்ஸ சுமங்கல தேரருக்காக அழுது புரண்ட அப்துல் பாஸில்


විචිත‍්‍ර පරිත‍්‍රාණ ධර්මදේශකයෙකු ලෙස මෙන්ම කවියෙකු, සාහිත්‍යධරයෙකු, ජනමාධ්‍යවේදියෙකු මෙන්ම පුරාවිද්‍යාව පිළිබදව හසළ දැනුමැත්තෙකු ලෙස ප‍්‍රකටව සිටි අඹේපුස්සේ සුමංගල හිමියෝ හදිසි හෘදයාබාධයක් හේතුවෙන් පසුගිය 24 වැනිදා අපවත් වූහ. අපවත් වන විට 56 හැවිරිදි වියෙහි පසු වූ උන්වහන්සේ ප‍්‍රදේශයේ සිංහල ජනතාව සමග මෙන්ම මුස්ලිම් ජනතාව සමගද සමීප සම්බන්ධතාවයක් ගෙනගිය හිමිනමකි.

කුරුණෑගල, රම්බඩගල්ල ශ‍්‍රී ස්වර්ණගිරි රජමහා විහාරස්ථානයේ විහාරාධිපතිව වැඩ සිටියදී අපවත් වී වදාළ අඹේපුස්සේ සුමංගල හිමියන්ගේ ආදාහන පූජෝත්සවය රම්බඩගල්ල මධ්‍ය මහා විද්‍යාල ක‍්‍රීඩාංගණයේදී පැවැති අතර , එහිමියන්ගේ චිතකයට ගිනි දැල් වූ අවස්ථාවේදී එය වාවගත නොහැකි එහිමියන්ගේ ශිෂ්‍ය භික්ෂූන් වහන්සේ, දායකයින් සහ ඥාතීන්ද සමග බොහෝ දෙනෙකු හඬාවැටුණි.

පහත ජායාරූපයෙන් පෙනෙන හඬා වැටෙන මුස්ලිම් ජාතිකයා අබ්දුල් ෆාසිස්ය. අබ්දුල් ෆාසිස් ඇතුළු මුස්ලිම් ජාතිකයින් බොහෝ දෙනෙකුද හිමිනමගේ වියෝව දරාගත නොහැකිව හඬාවැටී තිබුණි.

Himi www.nethfm.com - 02Himi www.nethfm.com - 01Himi www.nethfm.com - 03

http://nethfm.com


அம்பேபுஸ்ஸ சுமங்கல தேரருக்காக அழுது புரண்ட அப்துல் பாஸில்

விகாராதிபதி ஒருவரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட முஸ்லிம் ஒருவர் அழுது புரண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குருணாகல் ரம்படகல்ல என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசுவர்ணகிரிரஜமக விகாரையின் விஹாகாராதிபதியாகவிருந்த அம்பேபுஸ்ஸ சுமங்கல தேரர் அவர்கள் அண்மையில் காலாமானார். அன்னாரது இறுதிக் கிரியையகள் நேற்று முன்தினம் இடம்பெற்றன.

அன்னாரது தகனக் கிரியைகள் ரம்படகல்ல மத்திய மகாவித்தியாலயத்தின் வினையாட்டரங்கில் இடம்பெற்றன. பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட இந்தப் பிரதேசத்தை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் அன்னாரது தகனக் கிரியைகளில் கலந்து கொண்டு தங்களது அனுதாபத்தையும் தெரிவித்தனர்.
அதன்போது அங்கிருந்த அப்துல் பாஸில் என்பவர் உட்படலான பல முஸ்லிம்கள் தேரரின் பிரிவுத் துயரைத் தாங்க முடியாது அழுத காட்சியானது அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் “நெத் எப். எம்“ என்ற இணையம் இன ஐக்கியத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்தச் சிங்கள இணையம் இந்த நிகழ்வை ஒரு நெகிழ்ச்சி மிக்க சம்பவமாகக் காட்டியுள்ளது.

இன்றைய நிலையில் சிங்கள ஊடகம் ஒன்று இன ஐக்கியத்தை வலியுறுத்தி இவ்வாறானதொரு செய்தியை வெளியிட்டமை கண்டு நான் பிரமித்துப் போனதுடன் மகிழ்ந்தும் விட்டேன்.
குறித்த செய்தியை கீழள்ள லிங்கினைக் கிளிக் செய்து முழுமையாகப் படிக்க முடியும்.
நன்றி நெத்: எப்.எம்.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

No comments:

Post a Comment