“உங்கள் பிரதேசத்தின் தலைமைத்துவத்தைப் பொறுப்பெடுக்க முன்வாருங்கள்” BBS யின் கொழும்பு செயலமர்வு!!

BBS colombo

கொழும்பில் பொது பல சேனா அமைப்பின் அடுத்த கட்ட  நடவடிக்கைகளை  முன்னெடுக்கப்ப டவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 29ந் திகதி கொழும்பில் பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“உங்கள் பிரதேசத்தின் தலைமைத்துவத்தைப் பொறுப்பெடுக்க முன்வாருங்கள்” என்ற தலைப்பில், இந்த செயலமர்வு கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.இதில் நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து தேரர்கள் மற்றும் பொதுபல சேனா ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
எதிர்கால  நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மேலும் செயலமர்வின் பின்னர் கொழும்பின் முக்கிய பகுதியொன்றில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவும் பொது பல சேனா அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
அதன் போது முஸ்லிம்கள் அவதானமாகவும் , நிதானமாகவும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையின் தலை நகரான கொழும்பில்  அதிகளவு முஸ்லிம்கள் செறிந்து வாழ்வதுடன், கணிசமான வர்த்தகத்தையும் தம்மகத்தே கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://puttalamtoday.com/

No comments:

Post a Comment