வீசா முறையை மாற்றுவோம்: இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை

islamic_flagsஇலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத நடவடிக்கையின் பின்னால் உள்ளவர்களின் மீது சரியான நடவடிக்கையை அரசு எடுக்காவிடின் இலங்கைக்கு வழங்கப்படும் வீசா முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று பல முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பங்களாதேஷ், ஈரான், ஈராக், எகிப்து, இந்தோனேசியா, மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பாலஸ்தீன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தங்களது தூதுவராலயம் ஊடாக முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு இலங்கை அரசை கோரியிருக்கின்றது.

இலங்கைக்கு வழங்கும் வீசா முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டால் அது இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பில்  பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மத்திய கிழக்கில் தொழில் புரிந்துவரும் இலங்கையர்களின் மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல முஸ்லிம் நாடுகள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரை ஆங்கில இணையம் ஒன்று தொடர்புகொண்டு இது தொடர்பாக கேட்டபோது, இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
பல லட்சக்கணக்கான இலங்கையர்கள் மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பை பெற்று இலங்கை அந்நிய செலாவணி வருமானத்தில் பாரிய பங்காற்றி வருகின்றனர். வீசா முறையில் மாற்றம் வந்தால் அது இலங்கை பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனினும், இலங்கை அரசு இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது வெள்ளிடைமலை.

No comments:

Post a Comment