இந்து மத தலைவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பொதுபல சேனா! – Photos

galagoda
கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து இந்து, பௌத்த மதங்களையும் கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. எனவே, இன்றே ஒன்றுப்படுவோம், மதமாற்றத்திற்கு எதிராக போராடுவோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இதேவேளை மதமாற்ற தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைநிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம், அன்றாடம் தமிழ் பத்திரிகைகளை பார்க்கும்போது இந்துக்கள் குடும்பம் குடும்பமாக மதம் மாறுவதை காணக்கூடியதாகவுள்ளது. அதற்கான விளம்பரங்கள் நாளுக்கு நாள் பத்திரிகைகளில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது எமக்கு மட்டுமல்ல, கத்தோலிக்க திருச்சபைக்கும் சம்பிரதாயமாக அமைதியாக வாழும் முஸ்லிம்களுக்கும் வரும் பிரச்சினையாக அமைந்துள்ளது என்றும் தேரர் தெரிவித்தார்.
இந்துக்களை மதமாற்றம் செய்வதற்கு எதிராக இந்து சம்மேளனம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது.இதில் ஜனாதிபதியின் இந்து மத ஆலோசகர் பாபுசர்மா, ஐயப்பதாச குருக்கள் , பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட பல குருமாரும் சுமார் 500க்கு மேற்பட்ட இந்து பக்தர்களும் கலந்துகொண்டனர்.
hindu_protest

No comments:

Post a Comment