
இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாவனல்லை பூட் சிட்டிக்கு முன் உள்ள கடை ஒன்றில் (hardware) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமாகி உள்ளது.
பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினரின் உதவியுடன் இந்த தீயை கட்டுப்பாட்டிட்கு கொண்டுவந்தனர். இதேவேளை தீயணைப்பு படையினர் கண்டியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது. இது தொடர்பாக மாவனல்லை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment