கம்பளை ஸாஹிரா பாடசாலையின் அதிபர் விசாரணை நிறைவடையும் வரை இடமாற்றம்

எம்.ஜிப்ரி : கம்பளை சாஹிரா கல்லூரி அதிபரை  வலய கல்வி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரை வலயக் கல்விப் பணிமனைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
கம்பளை ஸாஹிரா தேசியப் பாடசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவமொன்றை குறிப்பிட்டு கம்பளை சாஹிரா கல்லூரி நிர்வாகத்திற்கும் அதிபருக்கும்  எதிராக  பௌத்த பிக்குகள் தலைமையில் கம்பளை நகரில்  நாட்டின் பிரதமரின் கோரிக்கையையும் புறக்கணித்து எதிர்ப்பு பேரணி மேற்கொண்டனர்

எதிர்ப்புப் பேரணியைத் தொடர்ந்து வலய கல்வி அதிகாரிகள் குழுவொன்று  சர்ச்சை குறித்து கலந்துரையாடியுள்ளது. விசேட கூட்டமொன்று இன்று 16.05.2014   மாலை கம்பளை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கம்பளை பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜாலிய பண்டார,  கம்பளை வலய கல்விப் பணிப்பாளர் ஆனந்த பிரேமசிறி, பிரதேசத்திலுள்ள பௌத்த மதகுருமார்கள், ஜாதிக ஹெல உறுமய அமைப்பாளர் ,பாடசாலை அதிபர், பாடசாலை பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர். http://lankamuslim.org/

No comments:

Post a Comment