தம்புள்ளை பள்ளி பிரதேசத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கைத்தொழில் அபிவிருத்தி வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ்மா அதிபர் என்.இலங்கக்கோனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது விடயமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ்மா அதிபர் அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளித் துள்ளார்.
தம்புள்ளை பள்ளிக்கு அருகாமையில் பாதை அபிவிருத்திப் பணிகள் புதன்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டது. இதனால், பள்ளிக்குப் பாதிப்புக்கள் ஏற்படலாமென பள்ளி நிர்வாகிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து, பொலிஸ்மா அதிபர் என்.இலங்ககோன், பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க ஆகியோருடன் தெடர்புகொண்ட அமைச்சர் பள்ளி வாசலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். (மு)
- ஸிராஜ் எம். ஸாஜஹான்


No comments:
Post a Comment