தம்புள்ளைப் பள்ளிவாசலை ஊடறுத்துச் செல்லும் வீதியை அமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இயந்திரங்கள் சகிதம் கூடியிருப்பதாக பள்ளிவாசல் நிருவாக சபைச் செயலாளர் ஜனாப் றஊப் சற்று முன்னர் மீள்பார்வைக்குத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வீதி அதிகார சபையினர் பள்ளிவாசல் மலசல கூடங்கள் மற்றும் அங்குள்ள வேறு சில கட்டிடங்களை தகர்க்கவுள்ளதாகவும், ஆனால், பள்ளிவாசலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர்கள் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், தம்புள்ளையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தெரிவிப்பதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை என பள்ளி நிருவாக சபைச் செயலாளர் ஜனாப் றஊப் மீள்பார்வைக்குத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment