அரச உயர்மட்டத்துக்கு எவ்வளவு கூறியும் கணக்கெடுக்கிறார்கள் இல்லை. அஸ்கிரிய ,மல்வத்த பீடாதிபதிகள் கவலை

நாட்டில் சமகாலத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக அரச உயர்மட்டத்துக்கு எவ்வளவு அறிவுறுத்தல்கள் வழங்கியும் பாராமுகமாக இருபது கவலை அளிப்பதாக அஸ்கிரிய ,மல்வத்த பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

இன்று மாலை இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அஸ்கிரிய ,மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்தவேளை அவர்களிடம் கருத்து தெரிவித்த மல்வத்த பீடத்தின் பீடாதிபதி திப்படுவாவே சுமங்கள ஹிமி நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக அரசின் உயர் மட்டத்துக்கு எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் அறிவுறுத்தல்கல் வழங்கியும்  எவ்வித பலனும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் கருத்து தெரிவித்த அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரகித தேரர் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் பொருத்தமானவர்களுக்கு பொருத்தமான இடத்தை வழங்காமல் இருப்பதே ஆகும் என தெரிவித்துள்ளார். முன்னதாக போதுபல சேனா அமைப்பு ஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரகித தேரரை சந்தித்த போது :பொது பல சேனா நினைத்தால்  அரசை ஆட்சியில் வைக்கவும் முடியும் ஆட்சியில் இருத்து அகற்றவும் முடியும் என கூறியிருந்ததை சுட்டிக்காட்டி நாட்டின் நலனுக்காக ஏதாவது செய்யுங்கள் என  போதுபல அமைப்பிடமும் கூறியிருந்தமை  குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment