(அஷ்ரப் ஏ சமத்) சமயங்கள் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகள் சம்பந்தமான விஷேட பொலிஸ் நிலையம் இன்று கொழும்பு 7 ல்; உள்ள பௌத்த மதவிவகார அமைச்சின் 7ஆம் மாடியில் இன்று காலை 09.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம மந்திரி தி. மு. ஜயரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், பௌத்த மதவிவகார அமைச்சின் செயலாளர் எம். கே.பி. திசாநாயக்க, பொலிஸ் மா அதிபர் எம். கே.இலங்கக்கோண். ஆகியோரும் கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தனர். மேற்படி நிகழ்வுக்கு பின்னர் ஊடகவியாளர் சந்திப்பு நடைபெற்றது. பொலிஸ் மாஅதிபர் எம்.கே.ரி.இலங்கக்கோன், பௌத்த மதவிவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.பி. திசாநாயக்க, மேல்மாகண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சிறிவர்த்தன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊடகவியலாளர் - அஸ்ரப் ஏ சமதினால் - எழுப்பட்ட கேள்வி - இதற்குப் பிறகு பொதுபலசேனா மத ஸ்தாபாணங்களில் உட்புகுந்து செய்யும் அட்டகாசம் நிறுத்தப்படுமா?
பொலிஸ் மா அதிபர் - தனிப்பட்ட இயக்கங்களது பெயர்களை இங்கு பாவித்து கேள்வி கேட்க வேண்டாம் என்று மட்டுமே பதிலளித்தார்.
ஊடகவியாளர் அஸ்ரப் ஏ சமத் - இந்த விசேட பொலிஸ்ப் பிரிவில் இந்த நாட்டில் உள்ள 4 மதங்களையும் பிரநிதித்துவப்படுத்தும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளனரா ? சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன - ஆம் இவ்விடயம் சம்பந்தமாக நாங்கள் பொலிஸ் திணைக்கள மட்டத்தில் கலந்தாலோசித்து 4 மதங்களையும் பிரநிதித்துவப்படுத்தும் பொலிஸ் அதிகாரிகள் இங்கு நியமிக்கப்படுவார்கள்.
பொலிஸ் மா அதிபர் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மதங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை கேட்டறிந்து அவ்விடயம் சம்பந்தமாக உரிய சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் இனங்களுக்கிடையே ஜக்கியத்தையும் ஏற்படுத்தவே இந்த விசேட பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ் நிலையத்தில் 16 பேர் கொண்ட பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தளத்தில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. கொடித்துவக்கு தலைமையில் இந் நிலையம் இயங்கும். ஓர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஒரு பொலிஸ் நிலையப்பொருப்பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவார்கள்.
நாட்டில் இதற்குப்பிறகு மதங்களுக்கிடையே எழும் பிணக்குகள் சம்பந்தமாக பொதுமக்கள் பின்வரும் தொலைபேசிமுலம் தொடர்புகொள்ளமுடியும். 011- 2307674 - 011 23076194 பெக்ஸ் - 2307788 - 2307406 பௌத்த சாசன மத விவகார அமைச்சின் செயலாளர் திசாயநாய்கக கருத்து தெரிவிக்கையில் 10,ஆயிரம் பௌத்த மத நிலையங்கள், 5000 ஆயிரம் ஹிந்து, 2500 கிருஸ்த்துவ ஏனைய மத 2000 மத நிலையங்கள் நாட்டில் உள்ளன. இதற்குப் பிறகு இந்த அமைச்சின் சுற்றுநிருபம் மற்றும் சட்ட திட்டங்கள் அடிப்படையிலேயே மத ஸ்தாபணங்கள் செயல்படவேண்டும். புதிதாக நிர்மாணிக்கப்படல் வேண்டும். சனத்தொகை பெருகப் பெருக மத ஸ்தாபணங்களும் பெருகுவது சாதாரண சம்பவமாகும். ஆனால் எமது அமைச்சிலிருந்து அனுமதி பெறப்படல் வேண்டும். அதற்கான சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றறிக்கை வெளியிடப்படும். அனுர சிறிவர்த்தன (பிரதிப்பொலிஸ் மா அதிபர்) 200 முஸ்லீம் குடும்பங்கள் உள்ள ஓர் இடத்திற்குச் சென்று ஒரு பௌத்த கோவில் அமைப்பதற்கு முடியாதவாறே பொலிசார் செயற்படுவாhகள். என பதிலளித்தனர். - See more at: http://madawalanews.com/news/miscnews/12502#sthash.3PKIJ5z1.dpuf

No comments:
Post a Comment