சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வணக்கஸ்தலங்களை உருவாக்குவதாயின் அதற்கு, தமது அமைச்சின் ஊடாக உரிய முறையில் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்துக்கு ஏற்ப அனைவரும் செயற்பட வேண்டும். இந்த நாட்டில் சமய நல்லிணக்கம் இல்லையென்று எவரும் கூறமுடியாது. மாறாக சிற்சில முரண்பாடுகளே காணப்படுகின்றன. எமது நாட்டில் சுமார் 20 ஆயிரம் வணக்கஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரம் பெளத்த விகாரைகளும், 5 ஆயிரம் இந்துக் கோவில்களும், 2500 கிறிஸ்தவ தேவாலயங்களும், 2500 பள்ளிவாசல்களும் உள்ளன. இவை போதுமானது என்பதே எனது பொதுவான கருத்தாகும் எனவும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் எம்.கே.பி. திஸாநாயக்க நேற்று புதிய சமய விவகார பொலிஸ் நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment