ஒரேதேசம், ஒரேசட்டம் என்பது பற்றி ஜனாதிபதி ஆணைக் குழுவினர் ரிஸ்வி முப்தி அவர்களிடம் கேட்கவும் இல்லை, அதுபற்றி அங்கு எதுவும் பேசப்படவும் இல்லை!
அஷ் ஷைக் நாகூர் ளரீஃப்
இஸ்லாமிய ஷரீஆவில் தண்டனைகள்
கலாநிதி அஹ்மத் அஷ்ரபின் காணொலி
தொழிலுக்குப் போனவர்களுக்கு ஏன் மேலதிக விளக்கங்கள்?
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு தொடராக பலரையும் அழைத்து சாட்சியம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் முஸ்லிம்களைப் பிரதிநிதிப்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் தமது சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு 96 வருடங்களாக மார்க்க ரீதியான வழிகாட்டல்களை வழங்கும் பிரதானமான ஒரு நிறுவனம் என்றஅடிப்படையில், அதனைசுமார் ஏழு தடவைகள் 2020.09.11, 2020.09.19, 2020.10.01, 2020.10.10, 2020.10.16, 2020.10.24, 2020.12.10 ஆம் தேதிகளில் அழைக்கப்பட்டு சாட்சியம் பெறப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் சென்ற2020.12.10 ஆந் தேதி வியாழக்கிழமை காலை 10:10 மணியளவில் இருந்து (பகலுணவு மற்றம் தொழுகைக்கான இடைவேளை அடங்கலாக) மாலை 5:30 வரையில் சமய, சமூகம் சார் பல்வேறு தலைப்புக்கள் பற்றி விசாரணைகள் தொடர்ந்தன.
அன்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ் ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி அவர்கள் சமுகமளித்திருந்தார். அவர்களிடம் கேட்கப்பபட்ட பல பிரதானமான செய்திகளில் ஒன்றாக இஸ்லாமிய ஷரீஆசட்டம் பற்றியதாகவும் அதில் வழங்கப்படும் குற்றவியல் தண்னைகள் பற்றியதாகவும் இருந்தது.எனினும் ஒரேதேசம், ஒரே சட்டம் என்பது போன்ற எந்தக் கேள்வியோ,அதற்கான தெளிவுகளோ அறவே அன்றைய தினம் கருத்தாடப்படவில்லை.
ஆணைக் குழு : (கலாநிதிஅஹ்மத் அஷ்ரப் அவர்களது ஒரு காணொலியைக் காண்பித்து) இவர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ரிஸ்விமுப்தி : தெரியும், எகிப்து - அல் அஸ்ஹரில் பட்டம் பெற்று,சஊதிஅரேபியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். ஒரு தடைவ அப்ஹாவிலும் (சஊதி) மற்றொரு தடவை விமான நிலையத்திலும் அவரைச் சந்தித்துள்ளேன்.
ஆணைக் குழு : அவரது காணொலியில் இருந்த பின்வரும் இரண்டு ஹதீஸ்களான, 'வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும், முஹம்மத் (சல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்பதை ஏற்ற முஸ்லிமான எந்தமனிதரையும் மூன்றுகாரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
ஒருமனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது, திருமணமானவன் விபசாரம் செய்வது, ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.
'எவர் மதம்மாறுகிறாரோ அவரைக் கொலை செய்து விடுங்கள்' என்ற அவரது கருத்தினை ஏற்றுக் கொள்கின்றீர்களா?
ரிஸ்விமுப்தி : ஏற்கனவே விளக்கியது போன்று, இது ஷரீஆவில் குற்றவியல் தொடர்பான பகுதியைச் சேர்ந்த விடயமாகும். குற்றவியல் என்பது ஷரீஆவில் 100 இல் ஒரு பகுதியாகும்.
நான் ஏலவே தாங்களிடம் ஷரீஆபற்றியஓர் அட்டவணை 2020.10.16 ஆம் தேதி கையளித்துள்ளேன். ஷரீஆ என்றவுடன், பிழையான அர்த்தத்தையே கொடுக்கப்படுகின்றது. அவ்வாறான அர்தத்துக்குப் போகாதீர்கள்.
இஸ்லாமிய ஷரீஆ என்பது, ஈமானிய்யாத் (நம்பிக்கைக் கோட்பாடுகள்), இபாதாத் (வணக்கவழிபாடுகள்), முஆமலாத் (கொடுக்கல் வாங்கல்), முஆஷராத் (குடும்பவாழ்வு), அக்லாக் (பண்பாடுகள்) என்றமிகவும் விரிவான பகுதிகளைக் கொண்டது. மாற்று மதத்தவர்களுடன் நடந்து கொள்ளும் முறைகள் மற்றும் தற்போதைய கெரோனா பாதிப்புக்குள்ளான பிறருக்கு உதவுதல் என்ற அனைத்தும் ஷரீஆவில் அடங்கும். அதில் ஒரு சிறுபகுதியே குற்றவியல் தண்டனைகளாகும். அதனையும் இஸ்லாமிய நாட்டில் அமுல்படுத்தப்படும் என்றே கலாநிதி அஷ்ரபும் குறிப்பிட்டுள்ளார்.
இக்குற்றவியல் தண்டனைகள் இலங்கையில் அமுல்படுத்துவதில்லை, இங்கு (இலங்கையில்) விவாக, விவாகரத்துச் சட்டம், அனந்தரச் சட்டம், வக்புசட்டம் போன்றன மட்டுமே சட்டரீதியாக அமுலில் உள்ளன.
உதாரணமாக, கிறிஸ்தவர்களின் பைபிளில் பல இடங்களில் குற்றவியல் தண்டனைகள், மரணதண்டனை என்பன இடம்பெற்றுள்ளன.அவற்றை எவரும் நடைமுறைப்படுத்த முயல்வதில்லை.
அது (குற்றவியல் தண்டனைகள்) ஓர் இஸ்லாமிய நாட்டில் உள்ள விவகாரம். அதனை யாரும் தனிப்பட்டமுறையில் செயல்படுத்த முடியாது. அதனைத் தான் கலாநிதி அஷ்ரப் சொல்கின்றார். பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு, அங்கு மதநிந்தனைக்கு (Blasphemy) எதிராக கடுமையான சட்டம் அமுலில் உள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப் புநாடுகளிலும் பலசட்டங்கள் அமுலில் உள்ளன. அவைகள் ஐக்கியநாடுகள் சபையின் உறுப்புநாடுகளாகும்.
கலாநிதி அஷ்ரபுடன் எனக்கு சில முரண்பாடுகள் இருக்கலாம். இவ்விவகாரத்தில் அவர் பிழையாக எதையும் குறிப்பிட்டதாக நான் அறியவில்லை.
ஆணைக் குழு : சஊதியில் தொழிலுக்காகப் போயிருப்போருக்கு ஏன் போதிக்கிறார்?
ரிஸ்விமுப்தி : ஒரு நாட்டுடைய சட்டங்களை அறிந்திருப்பது அவசியமாகும். அந்த அடிப்படையில் அந்தநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் வசிக்கின்றனர். அவர்களுள் தமிழ் பேசும் சகோதரர்களுக்கு மத்தியில் தண்டனைகளைப் பற்றியே பேசுகிறார். அதாவது,ஒருவர் முர்தத் ஆக மாறினால், (ஒருவர் ஒரு நாட்டுக்குத் துரோகம் செய்கிறார்) அவருக்கு வழங்கப்படும் தண்டனைப் பற்றி தெளிவுபடுத்துகிறார்.
ஆணைக் குழு : அங்குள்ளவர்கள் மூளைச்சலவை (Brainwash) செய்யப்பட மாட்டார்களா?
ரிஸ்விமுப்தி : இல்லை, அதற்காக அல்ல, ஒரு தெளிவிற்காக நாட்டின் சட்டத்தை விளங்கியிருக்க வேண்டும் என்பதற்காக போதிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் 'உம்தா' என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பற்றி நீங்கள் என்னிடம் வினவியபோதே இது பற்றிய போதிய முழுமையான தெளிவினை நான் தந்திருக்கிறேன். மீண்டும் இதனைக் கேட்கின்றீர்கள்.தவறில்லை, ஷரீஆவைப் பற்றிய முழுத் தெளிவும் தாங்களுக்குத் ஏற்கனவே தந்துள்ளோம். அது ஒரு முஸ்லிமினது வாழ்வின் அனைத்து அம்சங்களுடனும் தொடர்புபடுகின்றது. இதில் ஒரு சிறு பகுதியே குற்றவியல் தண்டனையாகும். அவையும் சில இஸ்லாமிய நாடுகளிலில் அரசாங்கத்தின் மூலமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதுதான் அதன் சாரம்சம்.

No comments:
Post a Comment