FILE இருக்குது உள்ளே போடுவோம் என்று பூச்சாண்டி காட்ட முடியாது! மேர்வின்

Mervin-Silva
அரசாங்கத்தில் இருந்து பல அமைச்சர்கள் வெளியேற உள்ள நிலையில்முதலில் அமைச்சர் மேர்வின் சில்வா அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேர்வின் சில்வா கடந்த சில தினங்களாக இது பற்றிய ஊகங்கள் சிலவற்றை வெளியிட்டார். அடுத்த வாரம் கிரகப் பெயர்ச்சி ஒன்று இடம்பெறவுள்ளதாக அவர் கூறியதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
அந்த செய்தியில் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது அரசாங்கத்தில் உள்ள சிலர் எம்மை பயமுறுத்த கோப்புகளை காட்டுகின்றனர்.

இதனால்அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு பல காலங்களுக்கு முன்னரே வந்து விட்டது. ஜனாதிபதி காரணமாகவே அதனை செய்யாதிருக்கின்றேன்.
பெலியத்தையில் இருந்து கொழும்பு வந்த எங்களுக்கு எந்த சிரமத்தை தாங்கி கொள்ள முடியும்.
பொலிஸ் பாதுகாப்புடன் நாங்கள் கொழும்புக்கு வரவில்லை. பொலிஸ் பாதுகாப்பது என்பது எனக்கு சில காலங்களுக்கு முன்னர் கிடைத்த ஒன்று.
பாதுகாப்பு இல்லை என்றாலும் எங்களுக்கு ஒன்றும் நடந்து விடாது. நான்மங்கள போன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தேர்தலில் நின்றாலும் எங்கள் சாதியினர் எமக்கு வாக்களிப்பர்.
எம்மை ஒதுக்கி விட்டால் எங்களின் அருமை புரிய வேண்டியவர்களுக்கு புரியும். இதனால் அடுத்த ஒரு வாரத்தில் சிறந்த கிரக மாற்றம் ஏற்படுவதை காணமுடியும்.
மேர்வின் சில்வா அந்த கோப்புகளுக்கு பயந்தவன் அல்ல. எனது மகன் தாக்குதலுக்கு உள்ளாகி மூக்கு உடைந்துள்ளது. ஆனால் இன்னும் பிணை வழங்கப்படவில்லை. ஏன் பிணை கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியும். இந்த விளையாட்டை தொடர்ந்தும் ஆட முடியாது என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். http://tamil.theindependent.lk/

No comments:

Post a Comment