தலாய்லாமாவுக்கு விசாவை மறுத்த அரசாங்கம் அசின் விராதுக்கு விசா வழங்கியுள்ளது.

Azathகொழும்பில் கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற மாநாட்டில் வைத்து பொதுபலசேனா இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும், புனித அல்குர்ஆனையும் கொச்சைப்படுத்தியிருப்பதாக மத்திய மாகாணசபை ஐ.தே.க.உறுப்பினர் அசாத்
சாலி குற்றம் சாட்டியுள்ளார்.
இம்மாநாடு முழுக்க முழுக்க அரச ஆசிர்வாதத்துடனேயே நடைபெற்றதாகவும், சர்வதேச கீர்த்திபெற்ற சமாதான விரும்பியும், துறவியுமான தலாய்லாமாவின் வருகையை மறுதலித்த அரசாங்கம், பர்மாவின் மோசமான கொலைகாரன் அசின் விராது தேரருக்கு விசா வழங்கியிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேற்படி மாநாட்டில் பெளத்த ஒற்றுமையோ, சமாதானமோ வலியுறுத்தப்படவில்லை எனவும், இலங்கையை துவேஷ அடிப்படையில் ” சிங்களீஸ்…..” என்று பெயர்மாற்றம் செய்யவே கோரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை மாரிமுத்து பிள்ளை கூறியதுபோல,பொதுபலசேனா இனசுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை சர்வ மத, கலாசாரங்களைக் கொண்ட நாடு. சகலருக்கும் சம உரிமையுண்டு. ஆயினும்,பொதுபலசேனாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அரசு செயற்படுகிறது. அரசாங்கத்தின் குரலாகவே பொதுபலசேனா ஒலிக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://lankamuslim.org/

No comments:

Post a Comment