ஜம்மியதுல் உலமாவை பயங்கரவாத அமைப்பென பொது பல சேனா அடையாளப்படுத்தியது ஆசியாவின் ஆச்சர்யமாகும்!

கலாநிதி அஷ்ஷெய்க்  மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா இலங்கையின் இஸ்லாமிய சன்மார்க்க அறிஞர்களின் சேமநலன்கள் காக்கின்ற ஒரு அமைப்பாகும்.

தங்களால் இயன்ற வரையில் பல்வேறு குறை நிறைகளுக்கும் பற்றாக் கோரிகளுக்கும் மத்தியில் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களை பல்வேறு தரப்புக்களுடனும் இணைந்து கையாளுகின்ற ஒரு சிவில் தலைமையாகவும் ஜம்மியதுல் உலமா செயற்பாட்டு வந்திருக்கின்றது.

கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு பற்றாக் குறைகளுக்கும் குறை நிறைகளுக்கும் மத்தியில் தங்களால் இயன்ற வரையில் தேசிய வாழ்வில் சமாதான சகவாழ்வை மற்றும் நடுநிலைமை இஸ்லாமிய சிந்தனையை மத சகிப்புத் தன்மையை கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் பொதுவான விவகாரங்களில் இணைக்கப் பாடுகளை மேம்படுத்துவதற்காக ஜம்மியாய்துல் உலமா காத்திரமான பங்களிப்புக்களை செய்துள்ளது.

வரலாற்றில் எந்தவொரு நெருக்கடியான காலகட்டத்திலும் முஸ்லிம் இளைஞர்கள் வன்முறைகளை நாடுவதனை ஜம்மியத்துல் உலமா அனுமதித்ததில்லை, மாறாக முஸ்லிம்களை ஆத்திரமூட்டுகின்ற செயற்பாடுகள் இடம்பெற்ற பொழுதெல்லாம் பல்வேறு விமர்சனக் கணைகளுக்கும் முகம் கொடுத்தவர்களாக முஸ்லிம்களை உச்சக் கட்ட சகிப்புத் தன்மையுடன் பொறுமை காக்குமாறு வலியுறுத்தி வந்தவர்கள் இந்த உலமா சபையை சேர்ந்தவர்கள்.

இனப்பிரச்சினையின் உச்சக் கட்டத்தில் முஸ்லிம்கள் சுஜூதிலே சுட்டுக் கொல்லப்பட்ட பொழுதும்,சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட பொழுதும், பூர்விக இடங்களில் இருந்து விரட்டப்பட்ட பொழுதும் வன்முறைகளை நாடாது இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்காகவும் சமாதான சமாதான சக வாழ்விற்காகவும் ஜனநாயக வழிமுறைகளில் மாத்திரமே தீர்வுகள் எய்தப்படல் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள், முச்ளிமரசியல் தலைமைகளை அவ்வப்பொழுது அழைத்துப் பேசியவர்கள், தேசிய அரசியல் தலைமைகளை சந்தித்தவர்கள்.
.
இந்த நாட்டின் சுமார் 3500 உற்பத்திப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர்கள். இன்றுவரை உள்நாட்டு முஸ்லிம்மக்களின் தேவைக்காக ஹலால் சான்றிதழை வழங்காது இலங்கையின் உற்பத்திப்[ பொருட்களின் வெளிநாட்டு சந்தைகளுக்காகாக சான்றிதழை வழங்க உடன்பட்டவர்கள்.
இனப்பிரச்சினை விவகாரத்தை மையமாக வைத் சான்றிதழை து சர்வதேச சமூகம் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதனை அனுமதிக்க முடியாது என்ற அரச தரப்பு முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாட்டுடன் உடன்பட்டு மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்க இஸ்ரேல் தலைமையிலான முன்னெடுப்புக்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களுக்கு (எழுதும் எனதும்) மத்தியிலும் ஜெனீவா வரை சென்று வந்தவர்கள்.

உலகில் அல்லது அரபு முஸ்லிம் உலகில் உள்ள எந்தவொரு தீவிரவாத அமைப்புடனும் எத்தகைய தொடர்புகளையும் நேராடியாகவோ மறைமுகமாகவோ கொண்டிராதவர்கள்..

இவர்களைத்தான் பொதுபல சேனா அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பாக முத்திரையிட முனைகிறது, கொத்துக் கொத்தாய் அப்பாவி ரோஹிங்கிய முஸ்லிம்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கத் தலைமை வகித்த மியர்மார் அஸின் விராது தேரோவினை சங்க மாநாட்டில் பிரதம விருந்தினராக வைத்துக் கொண்டு அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமாவை பயங்கரவாத அமைப்பாக அளுத்கமை வன்முறைகளுக்குப் பின்னால் இருந்த பொதுபல சேனா அமைப்பு அடையாள படுத்தியிருப்பது ஆசியாவின் ஆச்சர்யமாகவே தெரிகிறது.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளுக்காய் அமெரிக்க சென்ற ஜானாதிபதி "இலங்கை வாழ் முஸ்லிம்களை தனது சகோதரர்கள் போல் காப்பேன்" என இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் செயலாளர் நாயகம் யாத் மதனியிடம் தெரிவித்த அடுத்த கணம் பௌத்த சமயத்தின் மதத் தலைவர்கள் மாநாட்டில் முஸ்லிம்களா குறித்து மட்டரகமான கருத்துக்களை வெளியிட்டுள்ள பொதுபல சேனாவின் நிலைப்பாடுகள் குறித்து அரசாங்கமும் நான்கு தலைமை துறவிகளும் தமது தெளிவான நிலைப்பாடுகளை தேசத்தின் முன்னும் சர்வதேசத்தின் முன்னும் வைத்தல் வேண்டும்.

அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் தேசத்தின் நேச சக்திகளின் கவனத்தை ஈர்த்து குறித்த விவகாரத்தை வன்மையாக கண்டிக்க வேண்டும், அகில இலங்கை ஜம்மியாய்த்துல் உலமாவின் அனமைக்கால செயற்பாடுகள் அல்லது அவர்களது நிலைப்பாடுகளில் உள்ள அதிருப்திகளுக்கு அப்பால் இலங்கை முஸ்லிம்களின் அடையாளமாக அந்த அமைப்பு பார்க்கப்படுகின்ற ஒரே காரணத்திற்காவது ம்சுச்லிம் அரசியல் மற்றும் சிவில தலைமைகள் பொதுபல சேனாவின் மேற்படி பிரகடனத்தை வன்மையாக கண்டித்து நிராகரிக்குமாறு அரசியும் எதிர்க்கட்சிகளையும் கேட்டுக் கொள்ளல் வேண்டும். http://www.madawalanews.info/

No comments:

Post a Comment