பசிலின் மிரட்டல்களுக்கு பயமில்லை சுசில் எச்சரிக்கை…

Minister Susil Premjayanth
உங்களால் முடிந்தளவிற்க்கு முற்று முழுவதுமாக திருடியதானால், அரசாங்கத்தின் செல்வாக்கை வீழ்ச்சி காணச்செய்துள்ளீர்கள், ஆனால் தற்போது ஊவா தோல்விக்கு எங்களை குறைகூறுகிறீர்கள், நாங்கள் இத்தனை நாட்களாக பொறுமையாக, சகித்துக் கொண்டிருந்தோம், நாங்கள் என்ன விபச்சாரியின் பணத்தில் வாழ்பவர்கள் என கருதுகீறீர்களா? அமைச்சர் பதவியை இழந்த மறுநிமிடமே நான் சட்டத்தரணி வேலைக்கு சென்றுவிடுவேன். உங்களால் என்ன செய்ய முடியும், அமெரிக்காவிற்க்கு தப்பி ஓடத்தான் முடியும்-ஆனால் ஒன்று நாங்கள் உங்களுடைய போலியான மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்”
Minister Bazil Rajapakse
இவை அமைச்சர் பசில் ராஜபக்சாவை நோக்கி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான சுசில் பிரேமஜயந்த சீற்றத்துடன் சொன்ன வார்த்தைகள் பசில் தொலைபேசியில், சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு சொன்ன கருத்து தொடர்பாக சீறிய வேளையே இந்த பதில் அளிக்கப்பட்டது.

ஊவா தேர்தல்கள் அரசாங்கத்திற்க்கு பின்னடைவுதான் என சுசில் ஊடகங்களுக்கு தெரிவித்தது தொடர்பாக கண்டிப்பதற்காக பசில் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கண்டித்தார்- அவ்வேளை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நண்பர்கள், குடும்பத்தவர்களுடன் இருந்தார், எனினும் பசிலின் பேச்சால் சீற்றமடைந்த அவர் தான் இருக்கும் இடத்தையும் மறந்து பசிலின் மீது பாய்ந்தார்.

2005 இல் எங்கிருந்தீர்கள்? கட்சியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்க்கு பாடுபட்டவர்கள் நாங்கள் தான் பாடுபட்டோம், சுடப்பட்டோம், நீங்கள் என்ன செய்தீர்கள், அமெரிக்காவிலிருந்து வந்து தீடிரென அலரிமாளிகையில் தீடீர் என குதித்த நீங்கள் அளவில்லாமல் திருடிக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் கட்சியையும் அரசாங்கத்தையும் அழித்துவிட்டீர்கள், உங்களுடைய கீழ்த்தரமான செயல்களால் நாங்கள் வீதிகளில் செல்ல முடியாமலுள்ளது, இவை அனைத்தும் உண்மையான சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களையே பாதித்துள்ளது. எல்லாம் பிழையாக நடந்த பிறகு நீங்கள் அமெரிக்கா சென்றுவிடுவீர்கள், நாங்கள் தான் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்கொள்ள வேண்டும் என்றும் சுசில் பசிலை சாடியுள்ளார்.

இதன் பின்னர் பிரேமஜயந்த ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததை பொறுமையாக கேட்ட ஜனாதிபதி இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவேண்டாம் என தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து சுசில் சிலமூத்த அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார், இதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலுக்கான அலுவலகம் பசிலால் திறக்கப்பட்டவேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. நடந்தது தெரியாமல் சென்ற பவுசி பின்னர் நடந்ததை கேள்வியுற்று இடையில் திரும்பிவிட்டார். இதற்கிடையில் குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலை பசில் ஆரம்பித்த வேளை ஜனாதிபதியும் அருகிலிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment