அளுத்கம , தர்ஹா நகர் , பேருவளை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்படும் கடும்போக்குவாத சிங்கள பௌத்த அமைப்பான பொதுபல சேனா வுக்கும் மியன்மாரின் முஸ்லிம்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் முஸ்லிம்இன அழிப்புக்கு காரணமான அமைப்பு என குற்றம் சாட்டப்படும் 969 அமைப்புக்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திட்டப்பட்டுள்ளது
”தீவிரவாதமற்ற அமைதியான ஓர் வலயமாக ஆசிய பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பும் 969 அமைப்பும் உடன்படிககையில் கைச்சாத்திட்டுள்ளன என பொது பல சேனா அறிவித்துள்ளது !!!கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இன்று 30 இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தமது பிராந்தியத்தில் கடும்போக்குவாதத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் சகல பௌத்த அமைப்புக்களையும், கடும்போக்குவாத நிலைப்பாட்டை கொண்டிராத இந்து அமைப்புக்களையும் எதிர்காலத்தில் தமது அமைப்புக்களுடன் இணைத்துக்கொள்ளப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
மேற்படி உடன்படிக்கையின் உள்ளடக்கம் வெளியிடப்படவில்லை மேற்படி இந்த உடன்படிக்கை இரு நாடுகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களை மேலும் தூண்டக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://lankamuslim.org/
No comments:
Post a Comment