முஸ்லிம் குழுக்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் இணைப்பை ஏற்படுத்த முயற்சியாம்: கோதபாய

சஹீத் அஹமட்:  LTTE  இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் சில குழுக்களின் செயல்பாடுகள் குறித்து அவை குறித்து கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமானது இனக்குழுக்களிடையே மதவாதம் தலைதூக்குவதே யுத்தத்திற்கு
பிந்திய இலங்கையின் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது. அதற்கு தீர்வு காணவிட்டால் எதிர்காலத்தில் இன ரீதியான பதட்ட நிலை தலைதூக்கலாம்  என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இனவாத சிந்தனைகள் அதிகரித்துள்ளதாகவும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாவிட்டால் மீளவும் இன முரண்பாடுகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிங்கள தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருந்தனர் புலிகளிடமிருந்து  பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் முஸ்லிம்கள்  தற்பாதுகாப்பு குழுக்களை உருவாக்க தொடக்கினர் விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர் இந்த குழுக்கள் தற்பாதுகாப்பு என்ற நிலையிலிருந்து விலகி சென்று செயற்படத்தொடங்கியுள்ளன. அவ்வாறான சில குழுக்கள் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுடனும்  தொடர்புகளைப் ஏற்படுத்த முயன்றுள்ளன  என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது இதனை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின்  The Center for Complex Operations  என்ற அமைப்பிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அதனை குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு அப்பால் இலங்கை இலங்கை கடந்த கால கிளர்ச்சிகளில் ஈடுபட்ட அமைப்புகளின் ஆபத்தையும் எதிர்நோக்குகிறது. அந்த அமைப்புகள் இலங்கைக்குள் தங்களை மறுபடி ஒன்றினைத்து  தமது இடது சாரிகொள்கையை முன்னெடுக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய முகவர்களுடன் தொடர்பை ஏற்படடுத்துவதாகவும் தெரிய வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார். http://lankamuslim.org/

No comments:

Post a Comment