சுப்பரமணியம் சுவாமி இலங்கை விஜயம் - ஞானசாரரையும் சந்திப்பார்

subramaniam_swamyகொழும்பில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுப்பிரமணியம் சுவாமி இலங்கை வந்துள்ளார். அவர் இலங்கையின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பலரை சந்தித்து பேசியுள்ளார்.
பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களை பார்வையிடுவதுடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிடவுள்ளதாக கொழும்பின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான எற்பாடுகள் இரகசியமாக மேற் கொள்ளப்படுவதாகவும், பொதுபலசேனவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரையும் சுப்பிரமணிய சுவாமி சந்திக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது. http://newslnk.com/

No comments:

Post a Comment