மாநாயக்க தேரர்கள் இந்த நாட்டில் சிறு பிள்ளைகள் அல்ல – ஞானசார தேரர்

Screen Shot 2014-08-19 at 4.42.28 PM
மாநாயக்க தேரர் தெரிவித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்த ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை தவறானது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கிருலப்பனை பொதுபல சேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
“பொதுபல சேனா செயலாளர் வெளியிட்டுள்ள பிழையான கருத்துக்கள் தொடர்பில் அதற்கு எதிராக சட்ட ரீதியான எந்தவொரு நடவடிக்கைகளை மேற்கொள்ள அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் எமக்கு அனுமதி வழங்கியுள்ளனர்” என கடந்த புதன்கிழமை அமைச்சர் ராஜித சேனாரத்த உள்ளிட்ட அமைச்சர்கள் குழு அஸ்கிரிய மாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இது தொடர்பில் பொதுபல சேனா செயலாளரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
அஸ்கிரிய மாநாயக்க தேரர் அவ்வாறு தெரிவிக்கவில்லை, நாங்கள் அனைவரும் கண்டோம் குறித்த அமைச்சர்கள் குழு மாநாயக்க தேரர் முன்னாள் ஆடிய ஆட்டத்தை. மீண்டும் எங்களை வந்து சந்திக்குமாறு மாநாயக்க தேரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மாநாயக்க தேரர்கள் இந்த அமைச்சர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் முக்கியத்துவம் மிக்க அறிவித்தல் ஒன்றை வெளியிடுவார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். மாநாயக்க தேரர்கள் இந்த நாட்டில் சிறு பிள்ளைகள் அல்ல. அவர்கள் படித்தவர்கள், இந்த நாட்டில் கள்வர்கள் யார், போதைவஸ்து காரர்கள் யார் , கொலைகாரர்கள் யார் என்பதை அறிவார்கள்.
எது எப்படியோ அங்குலி மால புத்தபெருமானிடம் வந்து சரியான பாதையை தெரிவு செய்தது போன்று, சரியான பாதையை தேர்ந்தெடுத்தால் நல்லது. அது நாட்டுக்கும் நல்லது. எதிர்கால சந்ததியினருக்கும் நல்லது.
மாநாயக்க தேரர்கள் உடனடியாக தீர்மானங்களை வெளியிடுவதில்லை, அதி உயர் பீட ஆலோசனைகளுக்கு பின்னரே அவர்கள் தீர்மானங்களை வெளியிடுவார்கள். அகவே அப்படியானதொரு தீர்மானத்தை மாநாயக்க தேரர்கள் விரைவில் ஊடகங்களுக்கு வெளியிடுவார்கள்.
அவர்கள் எந்த தீர்மானத்தை வழங்கினாலும் நாம் அதற்கு தலைவணங்கி ஏற்றுகொள்வோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார். (ஸ) http://dailyceylon.com/

No comments:

Post a Comment