கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு


மூதூர் முறாசில்: திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளைமணல் கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டுள்ளதாக சீனக் குடா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள்
பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஊர்முக்கியஸ்தர்களும் இணைந்து இன்று ஞாயிற்றுக் கிழமை இம்முறைப்பாட்டை செய்துள்ளனர்.  சுமார் 177 வருடங்களுக்கு முன்பு 1837ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கூறப்படும் இப்பள்ளிவாசல் R/854/T/47 b ஆம் அரசாங்க பதிவிலக்கத்தையும் கொண்டமைந்திருந்தது.

கருமலையூற்று கிராமத்தில் முஸ்லிம் மக்கள் மிகநீண்ட காலமாக வசித்து வந்த நிலையில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர்  தம்வசப்படுத்தியிருந்தனர். என்றபோதும் கருமலையூற்று கிராமத்தில் ஒரு பகுதியில் மக்கள் மீளக்குடியமர்ந்த  போதும் குறித்த பள்ளிவாசலைப்  பயன்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர்   அனுமதிக்கவில்லை. இதேவேளை இன்று பாதுகாப்பு படையினர் குறித்த பள்ளிவாசலை தகர்த்துவிட்டதாக முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.
இணைப்பு …..
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் கருமலையூற்று கிராமத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மஸ்ஜித் புகழ்பெற்ற ‘மஸ்ஜிதுல் றாபியா’ என பிரதேச மக்கள் தெரிவிகின்றனர் . குறித்த பிரதேசத்திலுள்ள கடலில் மீன்பிடிக்கச் செல்வோர் மலைப் பகுதியிலுள்ள இந்த பள்ளிவாசலை அவதானித்தவாரே செல்லவர். எனினும்  இன்று மீன்பிடிக்கச் சென்றபோது குறித்த மஸ்ஜித்தை   காணவில்லை என பிரதேச மீனவாகள் தெரிவித்துள்னர் .
அதேவேளை திருகோணமலை, கருமலையூற்று பிரதேசத்தில் பள்ளிவாசல் எதுவுமில்லை என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா தெரிவித்துள்ளார். அப்பிரதேசத்தில் பள்ளிவாசலொன்று இல்லாத நிலையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக எவ்வாறு குற்றஞ்சாட்ட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் .
கருமலையூற்று  மஸ்ஜித் தொடர்பில் எமது முந்திய செய்திகள்:

”ஓரு வாரத்திற்குள் கருமலையூற்றுப் பள்ளிவாசலை வழங்குவோம்” என்னும் காற்றில் கலந்த வாக்குறுதியும்

கருமலையூற்று இன்னும் ஆக்கிரமிப்பில்

கருமலையூற்று கிராமமும் கிழக்கு மாகாண சபையின் தீர்மானமும்

கருமலையூற்று கிராமம்:நடவடிக்கை எடுக்க கிழக்கு மாகாணசபை ஏகமனதாக தீர்மானம்

கருமலையூற்று மஸ்ஜித்தையும் காணிகளையும் வழங்க ஆவணை செய்ய வேண்டும்: பிரேரணை

கருமலையூற்று பள்ளிவாயலை இன்னும் ஒரு வாரத்திற்குள் மீட்டுத்தருவேன்: கிழக்கு முதலைமச்சர்

கருமலையூற்றுப் மஸ்ஜித்தில் தொழுவதற்கான அவா நிறைவேறுமா?

வெள்ளை மணல் கருமலையூற்று மஸ்ஜித்தில் தொழுவதற்கு அனுமதி பெற்றுத்தாருங்கள்

கருமலையூற்று கிராமத்தினை மீள மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

கருமலையூற்று பள்ளிவாசல் புத்தர் சிலை எதுவும் இல்லையாம் :சத்தார்

கருமலையூற்று கிராமத்தினை மீண்டும் முஸ்லிம்களிடம் கையளிக்கவும்: ஹஸன்அலி


http://lankamuslim.org/

No comments:

Post a Comment